பக்கம்:கண்ணன் கருணை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1() வில்லில் வல்லவர் இருவர் இருக்கலாகாது ஆதலின் பார்த்தனைக் கொன்று, шпгггггsTт கர்னனுக்கு மணிமுடி சூட்டிக் காண்போம் பாரதம் நடக்க ஒரு காரணமான பாஞ்சாலி கூந்தலைக் களைந்திட வேண்டும் மற்றுமோர் நிபந்தனை அண்ணலே மணிவண்ணு சிறையிலே பிறந்தனை சிறைவைப்பேன் என்றுன். சாத்திரம் தெரிந்தவன் சொன்னதைச் சொன்னேன் சூதாடு களத்தில் சூளுரைத்த வீரனே துணிந்து நான் சென்றபோது நீ சொன்னதென்ன மானம் பெரிதென்று மார்தட்டியது மறந்தனையோ ? காண்டிபன் தத்துவத்தின் திருவிளக்கே எந்தன் அத்தானே துச்சாதனன் துகிலுரிந்த கொடுமை மறந்திலேன் பாஞ்சாலி அழுத கண்ணிர் வற்றவில்லை. அன்று சபை நடுவே நாங்கள் தலைகுனிந்தோம் வண்ணவண்ணப் புடவையாக நீ வளர்த்தாய் என்தலைவி மானம் பிழைத்தாள் உயிர்பிழைத்தோம் கைமிஞ்சிப் போன பின்னே கைகொடுத்த நீ சூது நடக்குமுன்னே தடுப்பதற்கு என்ன? கேள்விக்குச் சிரித்தான் கேசவப் பெருமாள். கண்ணன் நட்புக்குப் பெருந்தகை நான் வணங்கும்தோழன் தெய்வ நினைவன்றி வேறு தெரியாத குசேலர் என்மனைக்கு விருந்தாட வந்தார். அவருக்கு நான்பாத பூசை செய்திருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணன்_கருணை.pdf/11&oldid=1355102" இலிருந்து மீள்விக்கப்பட்டது