பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்ட வண்ணம் “என்ன என் தாய், அபிராமியம்மை ஆட்கொண்ட கருணையை என்னவென்று சொல்வது! இதற்கு இணையான கருணை வேறு எந்தச் செயலிலும் இல்லை" என்ருர் ஒரு பெரியவர். அவர் அம்பிகையின் திருவடிகளைத் தியானித்து ஞானம் பெற்றவர். தேவியின் தியானத்திலே நெடுநேரம் ஈடுபட்டுக் கம்பத்தைப்போல இருந்து விடுவார். அவருக்கு அபிராமிபட்டர் என்று பேர். சோழ நாட்டில் கால காலஞகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் தலமாகிய திருக்கடவூரில் வாழ்ந்தவர். அவரோடு சிறிது கற்பனையாகச் சம்பாஷணை செய்து பார்க்கலாம். . - "அம்பிகையின் கருணேயை வியக்கிறீர்களே! உங்களே ஆட்கொண்டதைப் பெருங்கருணைச் செயல் என்று பாராட்டுகிறீர்கள். உங்களுடைய தகுதியை அறிந்து எம் பெருமாட்டி உங்களே ஆட்கொண்டாள். இதில் என்ன வியப்பு இருக்கிறது?" என் தகுதியா? என் இயல்பைச் சொன்னல் வெட்கக் கேடு. நான் மணித் உருவத்தில் இருக்கிறேனேயன்றி விலங்கினமாக மதிப்பதற்குரியவன்.காயைப் போன்றவன்." என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? உங்களுடைய பக்தி மற்றவர்களுக்கு வருமா? காயென்று சொல்லிக் கொள்கிறீர்களே; அது நியாயமா? "ஆம், காய். போன்றவன்தான். மனிதராகட்டும், ம்ற்றவிலங்கின்ங்களாகட்டும்,தான் உண்டதைக் கக்கில்ை மீண்டும் அதைத் தின்னுவதில்லை. ஆளுல் நாயோ ஒரு முறை க்கினதை மீண்டும் உண்னும் இழிவான் இயல் நானும் அத்தகையவன்தான். அதுபவத்திலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/110&oldid=744356" இலிருந்து மீள்விக்கப்பட்டது