63 முடிவு கட்டிப்புடத்தான் வேணும்! ... வார பிள்ளை எனக்குக் கச்சிதமா சேதி சொல்லி ஒரு தாக்கல் கொடுக்கப்புடாதா? ஊம். ஒண்னுமே மட்டுப்படலையே! கண்ணக் கட்டி காட் டிலே விட்டதுக்கு சமதையாயிருக்குது: இந்த லட்சணத்திலே வீரமணியைப் பத்தின விசயங்களை ஆத்தாக்கிட்டே மூச்சுப் பறியவே கூடாது. ஆமா! ... இதைக் கேட்டாக்க பாவம், எம் பொன்னை பொண்ணு தரையிலே விழுந்த கெண்டையாட்டம் தவியாய்த் தவிச்சுத் தண்ணியாய் உருகிப்பிடும்! ...' மனக் குடைச்சலின் உறுத்தலில் அம்பலத்துக்கு ஆற்ருமல் வந்தது. மூப்பின் அசதியும் ஐந்து நாள் செய்நேர்த்தி அலு::ெ லும் அவரைக் கிறங்கச் செய்தன. துண்டை உதறிப் போட்டுத் திண்ணை முந்தலில் படுத்தவர் குறட்டை விடத் தொடங்கிஞர். அந்நேரத்தில்: - தண்ணீர்க் குடத்துடன் வாசலில் கால் வைத்தாள், அன் னக்கொடி, அவள் முகம் களையிழந்திருந்தது. இலைதழையிழந்து தென்பட்ட வாகை, கொன்றை, வேப்ப மரங்கள் அவள் பார் வையில் களையிழந்து தெரிந்தன. தன்னுடைய நிலைமைக்கும் அம் மரங்களின் அப்போதைய நிலைமைக்கும். ஏதோ ஒர் ஒற். துமை இருப்பது போன்றதோர் உணர்ச்சியை அவள் அனுப வித்தாள் தந்தை அடித்துப் போட்டாற்போன்று துயில் வசப் இட்டிருந்ததைக் கண்ணுற்ருள். குட்த்தைக் கீழே வைத்துவிட்டு, விக் கொத்தை எடுத்தாள். கம்பளத்தான் ஒருவன் குடுகுடுப்பையைத் தட்டிக்கொண்டு வாதலில் நின்றன். "நல்ல சேதி வருது, நல்ல சேதி வருது:. இந்தக் குடும்பத்துக்குக் கேடு நினைக்கிரு ஒருத்தி. அவள் ஐயோன்னு போயிடப் போரு!.. அவளாலே இப்ப இந்த ஆபி டிலே புசல் அடிச்சிக்கிட்டிருக்குது: ... தாயே!. காணிக்கை குடு!.. உன் தங்க மனசுக்கு தங்கச் சம்பா அரிசி கெடைச், உன் கழுத்துக்குத் தங்கத் தாலி கெடைக்கும்!... சுடுகாட்டுப்
பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/48
Appearance