பக்கம்:அறிவியல் விருந்து.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்பொருட் கலையில்... 35; கரியின் கதிரிங்க்க ஓரிடத்தான்; சதா கதிர்களை வெனீ விட்டுச் சிதைந்து பிரிந்தழியக்கூடியது. கதிரியக்க ஓரிடத்தான்கள் இடைவிடாது கதிரியக்கக் கதிர்களை' வீசுவதால் அவற்றின் இருப்பினைக் கைகர் எண்-கருவி' என்னும் ஒரு கருவியின் மூலமாகக் கண் டறியலாம். கதிர்கள் அக்கருவியின் மீது படுங்கால் க்ளுக்" என்ற ஒலியுண்டாகின்றது. இந்த ஒலியினால் அறிவிய லறிஞர்' தான் சோதிக்கும் பொருளில் கதிரியக்க ஓரிடத் தான் உள்ளது என்று அறிகின்றார். அந்த எண்-கருவி நெடுநேரத்திற் கொருமுறை க்ளுக்" ஒலியை இடைவிட்டு ஒலித்தால் அதில் ஒரிடத்தான்கள் மிகக் குறைவாகவுள்ளன ன்ேறும், அப்படியின்றி அவ்வொலிகள் அடிக்கடி உண்டாகிப் பொறி-துப்பாக்கியைச்" சுடுவதால் உண்டாகும் ஒலியைப் போல 'சடசட' என்று அக்கருவி அடித்துக்கொண்டால் அப்பொருளில் கதிரியக்கப் பொருள்கள் அதிகமாக உள்ளன என்றும் அவர் அறுதியிடுகின்றார். இப் பூமண்டலத்திலுள்ள தாவரங்கள் பிராணிகள் உட்பட எல்லா உயிரினங்களிடமும் வேதியியல் தனிம மான' கரி என்ற பொருள் அடங்கியுள்ளது. பச்சைத் தாவரங்கள் காற்று மண்டலத்தில் வாயு வடிவிலுள்ள கரியமில வாயுவினின்றும் இக்கரியினை அடைகின்றன என்றும், இவை கதிரவன் ஒளியிலிருந்து இக்கரியையும் பூமி பிவிருந்து கவரும் நீரையும் கொண்டு உணவினை உற்பத்தி செய்கின்றன என்றும் நாம் அறிவோம். இவை ஏனைய தாவரங்கட்கும் தாவரங்களை உண்ணும் பிராணிகட்கும் 17. §§fuššā āśrīsār-Radioactive rays. 18. off gray-4,656%-Geiger counter. 19. gouge off-Scientist. 20. @LirrÂ-giġt jirëê-Machine gun. 2i. Goiáuškić gofficip-Chemical element.