பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றுதலில் மேற்கொள்ளும் சாதனங்கள்-1 135 கோட்டுப் படங்கள் : ஆக்ஸிஜன், ஹைடிரஜன், கார்பன் - டை - ஆக்ஸைடு, குளோரின் முதலிய வாயுகளைத் தயாரிக்கும் துனேக் கருவிகள், குடிநீர்த் திட்டம், இரும்பு முதலிய உலோகங்களைப் பிரித்தெடுக்கும் ஆலைகள், காற்றுப் பம்பு, நீர்ப்பம்பு முதலியவை வேலே செய்யும்முறை, பறவைகளின் அலகுகள், பூச்சிகள், பிராணிகளின் தற்காப்புச் சாதனங்கள் முதலியவற்றை விளக்கும் கோட்டுப் படங்களே இந்தியா மையைக்கொண்டு நல்ல தாளில் வரைந்து தயார் செய்யலாம். ஆய்வகத்தில் பயன்படும் முக்குக் குவளை, குடுவை, புனல், சாராய விளக்கு, வாலை, வாயுசாடி, முக்காலி முதலியவற்றின் உருவப்படங்களே வரையச்செய்யலாம். சில பொருள்களைத் தயாரிக்கும் முறைகளே விளக்கும் படங்களே இரண்டு மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு முறைகளின் பல படிகளே விளக்கலாம். வானிலே அறிவிப்புகள், செய்தித்தாள் தகவல்கள் முதலியவற்றின் எடுகோள்களைக்கொண்டு மாளுக்கர்களால் வரையப்பெற்ற வரைப்படங்களும் சிறந்த கற்பிக்கும் சாதனங்களாகும். ふ மதிப்பு மாறுதல்களைக்கொண்டு சில வரைப்படங்களே வரையச் செய்யலாம். ஒரு திட்டப்படி நடைபெறும் மாறுதல்களே வரைப் படங்களால் நன்கு விளக்கலாம். ஒவ்வொரு மாதத்திலும் சராசரி உயர்ந்த தாழ்ந்த வெப்பங்லைகள், சராசரி மழை முதலியவற்றின் எடுகோள்களேக் கொண்ட வரைப்படங்கள் பொருள் விளக்கங் தரும். பல ஆண்டுகளில் வரையப்பெற்ற படங்களே ஒப்புநோக்குதல், இவ்விளக்கத்தை கன்கு உறுதிப்படுத்தும். ஞாயிற்றின் தோற்றம், திங்களின் தோற்றம் ஆகியவற்றின் நேரங்கள் முதலியவற்றைப்பற்றிய எடுகோள்களைக்கொண்டு வரையப்படும் வரைப்படங்கள் இயற்கையின் மாறுபாட்டைத் தெளிவாக விளக்கக்கூடியவை. பிற படங்கள் : அறிவியலறிஞர்களின் உருவப் படங்கள், சில வெளியீடுகளிலிருந்து கத்தரித்தெடுத்த விளக்கப்படங்கள், மின்சாரத் திட்டம், புகைவண்டிப் பொறி வானவூர்தி முதலியவற்றின் படங்கள், வே தி யி ய ற் பொருள்கள், தாதுப்பொருள்கள் முதலியவை கிடைக்கும் இடங்களைக் காட்டும் தேசப்படங்கள், அறிவியல்பற்றி நாளிதழ்களில் வெளியாகும் எடுகோள்கள், படங்கள் முதலியவையும் சிறந்த சாதனங்களாகப் பயன்படும். அறிவியல் பாடப்பகுதிகளைக் கற்பிக்கும்பொழுது இவற்றை நல்ல முறையில் பயன்படுத்தலாம். மேற்கூறிய படங்களே வகுப்பில் பயன்படுத்தும்பொழுது கரும் பலகையின் இடப்புற அல்லது வலப்புற ஒரத்தில் அவற்றைத் தொங்க விடுதல் வேண்டும். நாளிதழ்களில் வெளியாகும் படங்கள் கவர்ச்சி தரவல்லனவாக இருந்தால் அவற்றை ஆய்வகம், தாழ்வாரம், கடைபாதை ஆகிய இடங்களிலுள்ள விளம்பரப் பலகைகளில் ஒட்டி வைக்கலாம். அவை உருவிழந்து போகும்வரை பலகையில்