பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#34, அறிவியல் பயிற்றும் முறை ഹTamilBOT (பேச்சு) 05:13, 10 பெப்ரவரி 2016 (UTC)സTamilBOT (பேச்சு) 05:13, 10 பெப்ரவரி 2016 (UTC)്TamilBOT (பேச்சு) 05:13, 10 பெப்ரவரி 2016 (UTC)യ്ക്കേ பார்ப்பதில் மாணக்கர்களுக்கு உற்சாகம் இராது ; கவர்ச்சியும் தோன்ருது. அறிவியல் ஆசிரியர் விளம்பரப் பலகை வேலையைக் கவனிப் பதற்கென குழுவொன்றை அமைத்து அதனிடம் அப்பொறுப்பைக் கொடுக்கலாம். விளம்பரப்படுத்தவேண்டிய பொருள்கள், அவற்றின் அளவுகள், எண்ணிக்கை, எவ்வெப்பொழுது பலகையில் அவற்றை வைப்பது, பலகையில் எவ்வளவு இடம் வேண்டும் என்பன போன்ற வற்றை இக்குழு ஆராய்ந்து பணியாற்றும். விளம்பரப்படுத்தும் கலே, பொருள்களேத் தேர்ந்தெடுத்தல், பழையனவற்றை எடுத்துப் பாது காத்தல், புதிதாக வைக்கவேண்டியவற்றைத் தொகுத்து வைத்தல் போன்ற பொறுப்புகளையும் இக்குழு மேற்கொள்ளும். அறிவியல் ஆசிரியர் இக்குழுவின் தலைவராக இருந்து அதைச் சிறந்த முறையில் இயக்குவார். - விளம்பரப் பலகை நெட்டி, மிருதுவான பலகை போன்ற பொருள்களைக்கொண்டு செய்யப்பெற்ருல் நன்று. பலகையின்மீது மெல்லிய கம்பளத்துணியைப் போர்த்தினால், குண்டுசிகளைக் குத்தும் துவாரங்கள் தெரியாதிருக்கும். பலகை அழகாக இருப்பதற்கு நான்கு ஒரங்களிலும் கைத்திறனைக் காட்டும் சட்டங்களே அடித்து வைக்க லாம். பலகையில் வைக்கும் படங்கள், ஒளிப்படங்கள் முதலியவை பாதுகாப்பாக இருக்கும்பொருட்டு கண்ணுடிக் கதவுகளைப் பொருத்திப் பூட்டிவைக்கலாம். 4. படிமங்கள், படங்கள், கோட்டுப்படங்கள் முதலியவை : அறிவியல் கற்பித்தலில் இவை சிறந்த சாதனங்களாகப் பயன்படு கின்றன. இவற்றை கிறுவனங்கள்லும் வாங்கலாம். தொழில்துறை பயிர்த்தொழில்துறை முதலிய அலுவலகங்களிலிருந்தும் இனமாகவோ இரவலாகவோ பெறலாம். சிலவற்றை ஆசிரியரே ஆயத்தம் செய்து கொள்ளலாம். ஒவியத்திலும் கைத்தொழிலிலும் சிறந்த மானக்கர் களின் து&ணக்கொண்டும் பள்ளியில் கைத்தொழில் பகுதியில் பணியாற்றும் ஆசிரியர்களின் துணைக்கொண்டும் இவற்றை ஆயத்தம் செய்யலாம். அறிவியல் கற்பித்தலில் பயன்படும் ஒரு சில படிமங்கள், படங்கள் முதலியவற்றை ஈண்டு நோக்குவோம். படிமங்கள் : இதயம், சுவாசப்பை, காது, கண், வயிறு, குடல், தோல் முதலிய உடலுறுப்புகள் பற்றிய படிமங்கள் : கீழ் வகுப்பு களுக்குப் பயன்படும் நாய், பூனே, எலி, சிங்கம், புலி முதலியவற்றின் பொம்மைகள் - இவற்றைப் பள்ளியிலேயே மரத்துள், காகிதக்கூழ், களிமண் ஆகியவற்றைக்கொண்டு ஆயத்தம் செய்து நல்ல முறையில் வண்ணம் தீட்டிவைக்கலாம். பொறிகள், பம்புகள், உலோக உலேகள்: சுண்ணும்புக் காளவாப்கள் முதலியவற்றின் படிமங்களே நிறுவனங் களிலிருந்து வாங்கி வைக்கலாம்.