40
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
(Namaskar Dand)
பெயர் விளக்கம்
நேர்த் தண்டால் செய்வதுபோல முதலில் செய்து, பிறகு முன் நெற்றித்தரையில் படுமாறு தண்டால் செய்யும் பொழுது, கீழே விழுந்து வணங்கி, பெரியவர்களை நமஸ்காரம் செய்வது போலத் தோன்றும் அமைப்பினால் நமஸ்கார் தண்டால் அல்லது வணங்கும் தண்டால் என்று பெயர் பெற்றது.
சூரிய நமஸ்காரத் தண்டால் முறையின் ஒருபகுதி முறையாகவும் இது அமைந்திருக்கிறது.
செய்முறை
முதல் நிலை: நேர்த் தண்டாலின் ஆரம்ப நிலையில் முதலில் இருக்க வேண்டும். பின்புறமாகக் கால்களை நீட்டிவிட்டு நெஞ்சினை முன்தள்ளி, உள்ளங்கைகளுக்கு இடையில் இருப்பதுபோல வைத்து, தரைக்கு இணையாக உடலை நேர்க்கோட்டிலும் வைத்திருக்கவேண்டும்.
இரண்டாம் நிலை: இந்த முதல் நிலையிலிருந்து, முழங்கைகளை நன்கு உடலுடன் ஒட்டி வருவதுபோல மடக்கி, தரையினைத் தொடாதவாறு உடலை கீழ்ப்புறமாகத் தாழ்த்தி முன் நெற்றியால் தரையைத் தொடவேண்டும்.
தரையைத் தொட்டபிறகு மீண்டும் தொடக்க நிலைக்கு எழுந்து வரவேண்டும்.
குறிப்பு: இது போல் மீண்டும் பலமுறை செய்ய வேண்டும். தரைநோக்கி உடல்போகும் பொழுதும்,