உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


1. தண்டால் பயிற்சிகளைப் பொறுமையுடனும் நிதானத்துடனும் செய்யவேண்டும்.

2. தவறின்றி செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். அதற்காக கண்ணாடி முன்னே நின்றுகொண்டு செய்வது சிறப்புடையதாக அமையும்.

3. ஆரம்பத்திலேயே அதிக எண்ணிக்கையில் தண்டாலைச் செய்யக்கூடாது. நாளுக்கு நாள் கொஞ்சங் கொஞ்சமாக அதிகப் படுத்திக் கொண்டு போவது அறிவுடமையாகும்.

4. பயிற்சிக்கு முதலில் உடலைப் பழக்கிக் கொண்டாக வேண்டும். உடலை வருத்தியும் கஷடப் படுத்தியும் தண்டாலை செய்யக்கூடாது.

5. தண்டால் செய்யும்பொழுது, கைகளையும், கால்களையும் எவ்வளவுதூரம் இடைவெளியில் வைத்திருக்க வேண்டும் என்பதனை அறிந்து, அதற்கேற்ப வைத்துக் பழகவும்.

6. பயிற்சி முழுமையிலும், சுவாசத்தை ஒழுங்குற செய்யும் முறையை அனுசரித்துக் கொள்ளவும்.

7. தேவைக்கு மேலே தண்டால் பயிற்சியின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி விடக்கூடாது. தேவைக்கு மேல் என்பது பயிற்சி செய்யாமல் இருக்கின்ற நிலையைவிட கொடுமை பயப்பதாகும்.

8. வயதாக ஆக, அதவது 40 வயதுக்குமேல், தண்டாலின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள வேண்டும்.

இனி, தண்டால் பயிற்சிகளை செய்யத் தொடங்கலாம்.