உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்

31


வரும்பொழுதுதான். முகத்தை நேராகக் கொண்டுவர வேண்டும்.

2. வலதுகாலை மடக்கி, இடதுகாலை நீட்டி (மறுபுறம்) இதே தண்டாலைச் செய்யும் பொழுது. முகத்தை வலது புறமாகத் திருப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.

எந்தக்கால் மடக்கப்பட்டிருக்கிறதோ, அந்தக் கால் இருக்கும் பக்கம் முகத்தைத் திருப்பி வைத்திருக்க வேண்டும். என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஒருகால் மாற்றி மறுகாலில் மாற்றி மாற்றிச் செய்யவும்.

5. சக்கரத் தண்டால் (Circle Dand)

பெயர் விளக்கம்

நேர்த் தண்டால் எடுக்கும் நிலையில் முதலில் இருந்து, ஒரு காலைத்தூக்கி விறைப்பாக முன்புறம் பின்புறம் நீட்டி ஒரு முழு சுற்று சுற்றி வருவதுபோல தண்டால் செய்யும் முறை அமைந்திருப்பதால், இதற்கு சக்கரத் தண்டால் என்று பெயர் வந்திருக்கிறது.

இந்தத் தண்டால் முறை சற்று கடினமான ஒன்றாகும். கைகளும் கால்களும் இணைந்தாற்போல் செயல்பட்டால் தான் சீராகவும் சிறப்பாகவும் அழகுறத் தண்டாலை செய்ய முடியும்.