பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



தரையில் வைத்திருக்கும் இரு உள்ளங்கைகளும் (Palms) முழங்கால்களுக்கு இடையிலும் (Knees) இருக்கலாம் அல்லது முழங்கால்களுக்கு முன்னதாகவும் வைத்திருக்கலாம். படத்தில் முன்புறத்தில் வைக்கப் பட்டிருப் பதைக் காணலாம்.

இரு கரங்களும், அவரவர் தோள்களின் அளவு இருப்பது போல் இடைவெளி வைத்துக்கொண்டு அமரவேண்டும். இவ்வாறு அமர்ந்திருக்கும் பொழுதும். முதுகு (Back) விறைப்பாக, நேராக இருக்க வேண்டும். (Chest) என்றால் மார்பு என்றும் கூறலாம். மார்பு என்பது வேறு பொருள் குறிக்கும் தன்மையால், இதனை நெஞ்சு என்றே கூறுகிறோம்.) நெஞ்சு முன்புறமாக வந்திருக்க வேண்டும். தோள்கள் அல்லது தோள் பட்டைகள் சதுரமாகவும் சமநிலையிலும் இருப்பது போல் அமைந்திருக்க வேண்டும். தலை நிமிர்ந்தும், பார்வை நேராகவும் அதாவது நேர் நோக்கியும் இருக்க வேண்டும்.

செய்முறை

அமர்ந்திருந்த தொடக்க நிலையிலிருந்து, இரண்டு கால்களையும் ஒரே சமயத்தில், சீராகவும் நேராகவும் பின்புறமாக நீட்டி விடவேண்டும்.

அதே சமயத்தில், ஊன்றியுள்ள கைகளை மெதுவாக மடக்கி (Bend) நெஞ்சினைத் தரைக்கு அருகே கொண்டு செல்லவும். அந்த நிலையானது, தரைக்கு இணையாக உடல் நேர்க்கோட்டில் இருப்பது போல இருக்க வேண்டும். இப்படி இருக்கும்பொழுது. உள்ளங்கைகளாலும் முன் பாதங்