பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை சிந்தாமணிச் செம்மல் ழ வைணவச் செல்வம்" புலவர் மு. இராமசாமி எம்.ஏ., பி.எட். இருந்தமிழே உன்னால் இருந்தேன்-இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டன் : என்று அமிழ்தச் சுவையை வேண்டாத தாக்கி தன் கவையையே அறிஞர்களை வேண்டச் செய்யும் பெற்றியது தமிழ். தமிழ்ச்சுவை அமிழ்தத்தையும் சுவையற்றதாக்கும் இயல்பினை உணர்ந்தவர்கள் தமிழ்ச் சான்றோர்கள். 'நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் தென்னாட்டில் வைணவப் பெருமக்களால் பெரிதும் போற்றப்படும் சிறந்த பக்திப் பனுவல். இதன் கவிதைச் சுவையும் பக்திச் சுவையும் அழகும் நுகர்ந்து துகர்ந்து இன்புறத்தக்கவை. தமிழ் மக்கள் அனைவருக்கும் பொதுவுடைமையாகக் கொள்ளுதற்கரிய பெருந் தகுதி வாய்ந்தது. பக்திப்பாடல் என்ற நூல் வகையில் இதனைப்போன்ற பெருமையுடைய நூல்கள் இலக்கிய உலகில் மிக மிகச் சிலவற்றைத்தான் கருதுதல் கூடும். ஆழ்வார் பெருமக்கள் பன்னிருவரால் அருளிச் செய்யப் பெற்ற பாசுரங்களின் தொகுப்பே இப் பிரபந்தம், அருமறை துணிந்த பொருள் முடிவை, இன் சொல் அமுது ஒழுகுகின்ற தமிழினில் விளம்பி அருளி யவர்கள்தாம் ஆழ்வார் பெருமக்கள்.