பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறமும் இன்பமும் 1 நேர்மையான நுகர்ச்சி உலகில் வாழும் மக்கள் இறைவன் படைத்த பொருள்களை நுகர்ந்து வாழ்கிறார்கள். அப்படி நுகரும் போது நேர்மையான வழியில் துகராமல் நேர்மையற்ற நெறியிலே செல்கிறவர்கள் பலர். எதனை எப்படி எந்த முறையில் நுகர வேண்டும் என்பதை நம்முன் வாழ்ந்த பெருமக்கள் தம்முடைய அநுபவத்தினாலும் பேரறிவினாலும் உணர்ந்து நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள். அவர்களுடைய அறிவுரை எவ்வளவு உண்மையானது, பயனுள்ளது என்பதை நாமும் அநுபவத்தில் உணர்ந்து வருகிறோம். இருப் பினும் நாம் தீய நெறியிலே புகுந்து நுகரத் தலைப்படுகிறோம். இதையே மாயை என்றும் திரோதாயி என்றும் சொல்வார்கள். பாசி நிறைந்த குளத்தில் நீராடுவான் ஒருவன் அதைக் கையால் விலக்கிவிட்டு மூழ்குகிறான். ஆனால் அடுத்த கணமே மறுபடி யும் பாசி வந்து மூடிக் கொள்கிறது. அதுபோல இது செய்யத் தகாது என்ற அறிவு ஒரு கணம் நம்மிடம் தலைக்காட்டுகிறது; அடுத்த கணமே அதை மறந்து விடுகிறோம். பழமும் காயும் இனிய பழம் இருக்கும்போது காயை நுகர்வார் உண்டா? இருக்க மாட்டார்கள் என்றுதான் முதலில் தோன்றுகிறது. ஆனால் ஆராய்ந்து பார்த்தால் பல திறங்களில் நாம் கனியிருக்கக் காயைத் தான் நுகர்கிறோம். நாம் வாயினால் இன்சொல் பேசும் இயல்பு படைத்திருக்கிறோம். இன்சொல்லால் இனிமை உண்டாவதை நாம் அநுபவத்தால் உணர்ந்திருக்கிறோம். ஆயினும் பெரும் பாலும் இன்சொல்லைப் பேசுவதில்லை. இது கனியிருக்கக் காய்