76
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
17. கால்நீட்டும் வித்தை (Russian Rabbit)
இடதுகாலில் நின்று, பிறகு அப்படியே ஒற்றைக்காலை மடித்து உட்காரவும். உட்கார்ந்தபின் வலதுகாலை முன்புறமாக நீட்டவும். கைகள் இரண்டையும் முன்புறமாக வலது காலுக்கு இணையாக நீட்டிவிடவும்.
பின்னர், வலதுகாலை பின்புறமாகக் கொண்டுவந்து தரையில் ஊன்றி உட்கார்ந்து கொண்டு இடதுகாலை முன்புறமாக நீட்டவும், கைகள் இரண்டும் முன்போலவே முன்புறமாக நீட்டப்பட்டிருக்க வேண்டும்.
இதைப்போல் மாறி மாறிச் செய்யவேண்டும்.
18. கால்வீசித் தொடு (Mule kick)
கோவேறு கழுதைபோல் உதை என்று இதற்குப் பொருள்.
நின்று கொண்டிருக்கும் நிலையில் வலதுகாலை பக்கவாட்டில் முடிந்தவரை மேலாக உதைத்து வீசி வலதுகாலை வீசிய பக்கம் இடதுகால் வருவதுபோலத் தாவிக் குதித்து கீழே கால்கள் தரையைத் தொடும்முன் இடதுகால் முன் பாதத்தை ஒரு கையாலும் வலதுகாலை மற்றொரு கையாலும் தொட்டு விட்வும்.
அதேபோல், இடதுகாலை; இடதுபுறம் பக்கவாட்டில் வீசி உதைத்து, வலதுகால் இடப்புறம் வருவதுபோல் தாவிக் குதித்து தரையைக் கால்கள் தொடுவதற்கு முன்னர் வலது கால் முன்பாதத்தை ஒரு கையாலும், இடதுகாலை மற்றொரு கையாலும் தொட்டவாறு குதித்து விடவும்.
இதுபோல் பல முறை செய்க.