56
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
இதேபோல் பலமுறை குதித்து, இந்த பஸ்கியைச் செய்ய வேண்டும்.
இடப்புறம் என்றாலும் வலப்புறம் என்றாலும், கால்பாக (Quarter Turn) அளவு திரும்புதல் வேண்டும்.
6. நேர் நிலை பஸ்கி (Ordinary Baithak)
தொடங்கும் நிலை:
கால்களை இயல்பான இடைவெளி இருப்பதுபோல் அதாவது குறைந்தது 12 அங்குல தூரம் இருப்பதுபோல் விரித்து வைத்து, கைவிரல்களை மூடியவாறு பக்கவாட்டில் வைத்து நிமிர்ந்து நேராக நில். (படம் 10 பார்க்கவும்)
செய்முறை: நிமிர்ந்து நிற்கின்ற நிலையிலிருந்து ஒரு துள்ளு துள்ளி (Jump) அதே இடத்தில் குதிக்கலாம் அல்லது சற்று முன் தள்ளியும் குதித்து அமரலாம்.
(அ) முன்பக்கம் தாவல்:
நின்ற நிலையிலிருந்து முன்புறமாகத் தாவிக் குதித்து (Forward), அந்தப் பக்கமாக இரண்டு கைகளும் மேல்நோக்கி வந்து, தோள்பட்டை மீது கட்டை விரல் அழுத்துவது போல வைத்து அமரவும்.
அமரும் நிலையானது, உடலின் எடை முழுவதும் முன் பாதங்களில் (Toes) இருப்பதுபோல், முழங்காலிரண்டும் பக்கவாட்டில் சற்று விரிந்திருப்பது போல விரித்து, முன் பாதங்களில் அமரவேண்டும்.
உட்காரும் நிலையிலும், உடலை நேராக நிமிர்த்தி உட்காரவும். நேர்கொண்டபார்வையுடன் பார்க்க வேண்டும்.