58
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
பிறகு, வலது கையை வலது தோளுக்கு அருகில் கொண்டுவந்து, உள்ளங்கை முன்புறம் பார்ப்பதுபோல வைத்தபடி, விரித்து வைக்கவும். இடது கையானது இடது முழங்காலின் முன் வைத்தபடியே, தரையை விட்டு எடுக்காத வண்ணம், வைத்திருக்க வேண்டும்.
பிறகு, முன்பிருந்த நிலைக்குக் கொண்டு வந்து விட வேண்டும். அடுத்து, இடது கையை இடது தோள்புறம் கொண்டு வரவும்.
இவ்வாறு ஒரு கை மாற்றி ஒரு கை செய்ய வேண்டும்.
8. இரு கை இயக்கப் பஸ்கி
(Baithak with Both Arm Movement)
தொடங்கும் நிலை
முழங்காலிட்டுச் செய்யும் பஸ்கியில் செய்வது போன்ற நிலை. (ஒரு கை இயக்கப் பஸ்கியில் உள்ள விளக்கத்தைக் காணவும்).
செய்முறை
முதல் வகை: இயக்கப் பஸ்கியில், ஒரு கையை கொண்டு வந்து தோளுக்கருகில் முழங்கையை மடக்கி வைத்து, உள்ளங்கை வெளிப்புறம் தெரிவது போல கையை விரித்து இருப்பது போல, இரண்டு கைகளையும் இதே போல் விரித்துச் செய்யும் பஸ்கி முதல் வகையாகும்.