பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52 □

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின்


இவ்வாறு, ஒளிக்கிரணத்தின் பாதை விலகல் அளவை ஐன்ஸ்டைன் எள் பிளவளவு கூட வித்தியாசமில்லாமல் கணக்கிட்டார். இந்த அறிவியலின் ஆய்வுக் கணக்கியல் சோதனையில் வெளியான பிறருடைய முடிவோடு ஒத்திருந்ததை அறிவியல் உலகு பலமுறை ஆராய்ந்து கண்டு நம்பியது.

இந்த அறிவியல் சோதனை, முழு சூரியக் கிரகணத்தன்று நடந்தது. கிரகணத்தின் போது ஆய்வு செய்தால் தான் சூரியன் அருகாமையிலுள்ள விண்மீன்களை நன்றாகப் படம் எடுக்க முடியும், தெளிவாகவும் இருக்கும். சூரிய ஒளியின் மறைப்பு ஏதும் இல்லாமல் துல்லியமாகவே படம் தெரியும்.

அவ்வாறு எடுத்த நிழற் படங்களைக் கொண்டு ஒளிப்பாதையின் ஒளிக்கிரணத்தின் விலகல் அளவை மற்ற விஞ்ஞானிகள் கணக்கிட்டுப் பார்த்து உண்மையை உணர்ந்தார்கள். எப்படியென்றால், அந்த விஞ்ஞானிகளின் ஆய்வு, கணக்கு, விதி, எல்லாம் ஐன்ஸ்டைன் கணிப்போடும் அளவோடும் ஒத்திருந்தது, சிறுச் சிறு வித்தியாசத்துடன்,

இந்த வித்தியாசங்களை எல்லாம் விஞ்ஞான உலகம் பொருட்படுத்தவில்லை. கையாளப்படும் கருவிகளைப் பொறுத்தவரையிலும், சில ஊசி முனையளவு வித்தியாசங்கள் உருவாவது வழக்கமானதுதான் என்று எண்ணி, ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுடைய கொள்கை உண்மையானது என்று உலகம் நம்பியதால், அவரது புகழ் வானளாவப் படர்ந்தது.

புவி ஈர்ப்பு என்பது ஒரு விசை அல்ல; அது ஒரு புலம் Field என்று விஞ்ஞான உலகுக்கு ஐன்ஸ்டைன் உணர்த்தினார்.

‘புவிஈர்ப்புப் புலம் வழியாகப் பயணம் புரியும் ஓர் ஒளிக்கிரணம், அதன் பாதையிலிருந்து புலத்தில் உள்ளிழுக்கப்-