பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



68 □

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின்


அணு, பொருள்-சக்தி இந்த மூன்றின் அடிப்படைத் துகள்கள், இன்னும் உணர்ந்து அறியமுடியாத வகையில் மிகச்சிறிய அளவில் பரிணமித்து மிகக் குறைந்த எல்லைக்குள் செயல்படும் உண்மைத் தத்துவங்கள்; இவையெல்லாம் பகுதித் தத்துவத்தால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஒப்புமைத் தத்துவம், பகுதித்தத்துவம் என்ற இரு விஞ்ஞான அமைப்புகளும், முற்றிலும் மாறுபட்ட, ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற, சித்தாந்த அடிப்படைகளில் உருவானவையாகும். தனித்தனியே அவற்றை ஆராய்ந்தால், அவையிரண்டும் ஒரே அறிவியல் மொழியைப் பேசவில்லை.

ஐன்ஸ்டைனுடைய ஐக்கிய வெளித் தத்துவத்தின் நோக்கம் இந்த இரு விஞ்ஞானத் தத்துவ முறைகளையும் இணைத்து விடுகின்றது. இயற்கையின் ஒழுங்கிலும், ஒருமைப்பாட்டிலும் நம்பிக்கையுள்ள ஐன்ஸ்டைன், இந்த இரண்டு விஞ்ஞான முறைகள் விளக்கும் அணு நிகழ்ச்சிகளையும், வெளிமண்டல நிகழ்ச்சிகளையும் இணைத்து ஒரே அடிப்படையில் அமையும் பெளதிக விதிகளை ஐக்கிய வெளித் தத்துவத்தின் மூலம் வெளியிடுகிறார்.

இந்த ஐக்கிய வெளித் தத்துவம், இயற்கையின் எந்தெந்த எதிர்பாராத புதிய கொள்கைகளை வெளிப்படுத்தப் போகின்றது. உலகத்தின் பழைய பிரச்னைகள் எவ்வளவுக்கு விடையளிக்கப் போகின்றது என்னும் செய்திகளை இப்போது முன்கூட்டி அறிவித்து விட முடியாது. ஆனால், இப்போதைக்கு அந்தத் தத்துவம் எதைச் சாதித்து விட்டது என்பதைக் கூறிவிடலாம்.

ஆகர்ஷண விதிகளையும், மின்காந்த விதிகளையும் ஐக்கிய வெளித் தத்துவம் மகத்தான ஒரே அடிப்படை