பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

சந்திரசேகரன்

ந்தாவது பொருளாக இறைவனுடைய சடையில் இருப்பது சந்திரன். சிவபெருமான் "அம்புலியின் கீற்றைப் புனைந்தவன்". அம்புலியின் கீற்று அவன் செஞ்சடாடவியின் மேல் ஏறிக் கொண்டு, அவனுடைய அளப்பருங் கருணையைக் காட்டுகிறது.

எம்பெருமான் பூமாலையை வைத்திருப்பது போல சந்திரனைத் தலையில் வைத்திருக்கிறான். அம்புலியைச் சூடிக் கொண்டிருப்பதால்தான் அவனுக்குச் சந்திரசேகரன் என்ற பெயர் வந்தது. இறைவன் பிறையை அணிந்திருப்பதன் உட்கருத்தை எண்ணிப் பலர் சந்திரசேகரனாக இறைவனைப் பார்க்கிறார்கள். ஞான சம்பந்தப் பெருமான் உமாதேவியார் ஊட்டிய சிவஞானப் பாலைக் குடித்த மாத்திரத்தில், "தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதி சூடி" என்று பாட ஆரம்பிக்கிறார். "பித்தா பிறைசூடீ" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடுகிறார்.

தனக்குப் பிரியமானவர்களையே ஆண்டவன் தலையில் சூடிக் கொண்டு ஆடுகிறான் என்பதில்லை; தனக்குத் தவறு எண்ணியவனையும் ஆண்டவன் ஆட்கொள்ளுகிறான் என்பதைச் சந்திரன் காட்டுகிறான்.

உலகத்தில் இரண்டு காரியம் எல்லாவற்றையும்விடத் தவறானவை. குருவுக்கு அபராதம் பண்ணுவது, இறைவனுக்கு அபராதம் பண்ணுவது ஆகிய இரண்டு காரியங்களும் மன்னிக்க முடியாத குற்றங்கள். தந்தை தாய்க்கு அபசாரம் பண்ணுவதும் குற்றந்தான். அதைவிட மிஞ்சிய குற்றம் குருவுக்கு அபசாரம் பண்ணுவது. சந்திரன் குருவுக்கு அபசாரம் பண்ணினவன்; அதோடு சிவபிரானுக்கும் இவன் தவறு இழைத்தான்.

தட்சன் ஒரு பெரிய யாகம் பண்ணினான். அந்த யாகத்துக்குச் சிறப்பான ஏற்பாடுகளைப் பண்ணியிருந்தான். எல்லோருக்கும் அழைப்பு அனுப்பியிருந்தான்; ஆனால் பரமேசுவரனுக்கு அனுப்பவில்லை.

பமமேசுவரன் யாகத்திற்குத் தலைவன்; அதனால் அவனுக்கு யக்ஞேசுவரன் என்று பெயர். எல்லா ஏற்பாடுகளும் கல்யாணத்திற்குச் செய்திருந்தாலும் மாப்பிள்ளை இல்லாவிட்டால் அது

64