உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30


இல்லை; மட்டமான விஷயங்கள், பண்பாட்டை சிதைத்துச் சீரழிய வைக்கும் கதை கட்டுரைகள், இளம் உள்ளங்களை வெகு. வாக பாதிக்கக்கூடிய சமாச்சாரங்களே அதிகம் இருக்கின்றன என்று சொல்லிக் கொண்டு, ஒவ்வொரு வாரமும் அதே பத்திரிகைகளை ஆவலுடன் நாடுகிறார்கள்.

பெரும்பாலான வாசகர்களைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட சில பத்திரிகைகளை வாசிப்பது ஒரு போதை மாதிரி ஆகி விட்டது.

பல பேருக்குக் காலையில் எழுந்தவுடன், ஹிண்டு பத்திரிகை பார்க்காவிட்டால் என்னவோ போலிருக்கிறது’ என்ற உணர்வு ஏற்படும். அதே மாதிரி வார முடிவில், ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட சில பத்திரிகைகளை படித்தே ஆக வேண்டும் என்ற உணர்வு ரொம்பப் பேருக்கு இருக்கிறது. அப்படி ஒரு சுவையை "மசாலாப் பத்திரிகைகள் மக்களிடையே வளர்த்து விட்டன.

தரமான விஷயங்களைப் படித்து ரசிக்கிற வாசகர்கள் அவ்ை பற்றி நண்பர்களுக்குச் சொல்கிருர்கள். பத்திரிகைகளில் தரம் குறைந்த விஷயங்களே வருகின்றன என்று காரமாகப் பேசுகிருர்கள். ஆனாலும், அந்தப் பத்திரிகைகளை வாங்காமல் இருப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும். தரம் குறைந்த விஷயங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிற பத்திரிகைகளை அவர்கள் வாங்காமலே இருக்க வேண்டும். மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும்.

விற்பனை குறைந்தால் தான், வணிக நோக்குப் பத்திரிகையாளர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்வது