பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளியின் தன்மைகள் 15 மின்னணுக்கள் இயங்கும்பொழுது மின்காந்த அலைகள் உண்டாகுமென்பதை நாம் அறிவோம். ஆல்ை, இந்த அலேகள் மிகவும் குறுகியவை. காரணம், இந்த மின்னணுக்கள் கடந்து செல்லும் அயனப் பாதைகளுக் கிடையிலுள்ள தூரம் மிகக் குறைவானது. நாம் ஒற்றையலை யொன்றினைக் 绊التالييج படம் 6: சூடாக்கப்பெற்றுள்ள இரும்புத் துண்டில் பல மின்னணுக்கள் அயனப் பாதைகளில் தாவுவதைக் காட்டுவது காணமுடியாது. ஆயினும், வெண்ணிறச் சுடர் தோன்றும்வரை குடாக்கப்பெற்ற இரும்புக் துண்டில் பல மின்னணுக்கள் அயனப் பாதை களில் தாவுகின்றன ; இதல்ை பல அலைகள் இரும் பினின்றும் கிளம்புகின்றன. நம்முடைய கண்கள் இந்த அலைகளை ஒளியாகக் காண்கின்றன. கடந்த மூன்று நூற்ருண்டுகளில் பல அறி வியலறிஞர்கள் ஒளியின் வேகத்தைக் கணக்கிடு