பக்கம்:உயிரில் கலந்தது.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

தாளிலே ஒரு தரமேனும் காதலித்துப் பழக்கப்படாத வன் பைத்தியக்காரன்’ என்று யாரோ ஒருவன் சொன்ன தற்கும், காதலிக்க நேரம் இல்லை என்பதாக வேறு எவனே ஒருவன் உ ைர த் த த ற் கு ம் இடைப்பட்ட தொலே விலே நின்று-நிதானித்து-நிர்ணயப்படுத்திச் சிந்தித்துப் பார்க்கும் பாக்கியம் பெற்ற நான், காதலை ஒரு பொருட்டாக ஏன் கருதவேண்டும்?...காதலாவது, மண்ணுங்கட்டியாவது? மண் புழுதியில் கண் திறந்து, சாம்பல் புழுதியில் கண்மூடும் இவ்வுலக வாழ்க்கையில் காதலுக்கு முக்கியத்வம் தர எண்ணு வது எவ்வளவு மதியீனம்: வாழ்க்கையை உணர்ந்து, மனத் தைப் படித்து, அதன் மூலம் உலகத்தைப் புரிந்துகொள்ளப் பிறந்தவனே மனிதன்! இதுதான் என் கருத்து. பேச முடிந்த வன் மனிதனுக இருக்கலாம். ஆனல் செய்ய முடிந்தவனே மனிதனுக இருப்பான்! இதுவேதான் வாழ்வின் நியமம்!...”

நெடிய பொழுதாகச் சிந்தித்தவர் போல, மனம் வலிக்க வீற்றிருந்தார் அவர். அடுத்த மாதம் எழுதவேண்டிய தொடர் கதைப் பகுதிக்கான குறிப்பு நோட்டைப் பிரித்து வைத்துக் கொண்டார். சிகரெட் பெட்டி, டிரங்குப் பெட்டியின் அடியில் தாங்கியதை எண்ணிய சமயம் அவருடைய சிந்தனை உணர்வு, பிடரியில் அடிபட்ட செம்மறிபோல, சிலிர்த்துக்கொண்டது.

“வாணி எங்கே?’ என்று அவர் இதயம் மழலையாகத் தவழ்ந்து, வினயம் ஏதுமின்றி, வெள்ளையாகக் கேட்டுவைக் கவே, அதை ஆதாரமாகக்கொண்டு, அவர் நயனங்கள் அந்தக் குமரியைத் தேடின. அவளைக் காளுேம் வாணி எங்கே? நேற்றுச் சாயந்திரம் வீட்டுக்குப் போனவள், இரவு வரவேண் டாம்; காலை கழியப் போகிறது. இன்னமும் முகத்தைக்கூட காட்டவில்லையே? எங்கே? * * : . . .

வாணியைப் பற்றி நினைத்தவருக்கு, அவள் உதிர்த்த வேடிக்கைப் பேச்சும், அந்த வேடிக்கைப் பேச்சிற்கு உத்தா ரணம் தந்த அந்தப் பூமாலையும் சிரிப்பையூட்டின. விழுந்து விழுந்து சிரித்தார். நல்லவேளை, பல் ஏதும் உடையவில்லை;