பக்கம்:உயிரில் கலந்தது.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40


நினைவுகளுக்குச் சுகந்தம் உண்டு; சுகம் விரவிய சுகானுபவ. உணர்வும் மிச்சம்.

ஞானசீலனின் மனம் என்னவோ செய்தது. எதையோ ஒன்றை இழக்கக் கூடாது என்கிற தவிப்பு மேலோங்கி ஆதங்க வடிவு கொண்டது. அழகின் வடிவு கொண்ட தனக்குப் பழக்கம் ஏற்பட்ட அழகிகளின் வரி வடிவங்களைநினைத்து நினைத்துப் பார்த்தார்.

மூடிய கண்கள். மூடிடாத சிந்தனைலயம்.

ஆடிய அழகு. ஆடாத மயக்கநிலை. கிழக்கே நோக்கினர். அங்கே வாணி நின்றாள்! வடக்குப் பக்கம் சாய்ந்தார். அங்கும் வாணிதான்! விண் முட்டிஞர். அவ்விடத்திலும் விண்முட்டி நின்றாள் வாணி. மண்ணுக்குத் தாழ்ந்தார். மார்பகச் சேலை மண் மாதாவை ஆரத்தழுவிட, மாண் புற்ற எழில் மயக்கம் இனிய சொப்பத் திளைப்பில் ‘நலுங்கு” பாட, தோன்றாமல் தோன்றி-சிரிக்காமல் சிரித்த அந்தப் பொற்பதுமை வாணியை தொடுத்த வழி மடக்காமல் பார்த்தார்; பார்த்துக் கொண்டேயிருந்தார். “ஆஹா, வாணிதான் அழகுக்கு ஆதரிசப் பொருளா? X- . - ಗ್ಬಾಣಲ್ಲ மறுமுறை பார்த்துவிட வேண்டுமென்ற அரிப்பு கிளர்ந்தெழுந்தது.

. ఆఫ్రో வந்தாள் கைவிளக்குடன் வந்தாள். அவளிடம் ஞானசீலன் சொன்னர் : அம்மா, எனக்கு வாணியை நிரம் . பவும் பிடித்திருக்கிறது!’ . ‘.