பக்கம்:ஏலக்காய்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43


நூற்புழுக்கள்!

அப்பால், 'நெமாடோட்' எனப்படும் நூற்புழுக்கள் சாகுபடித் தோட்டங்களிலே வெகு சகஜமாகவே தென்படும். இவற்றின் படையெடுப்பு வேர் முடிச்சுக்களில் ஆரம்பிக்கப்படும்.

நோய் பீடிக்கப்பட்டால், செடிகளுக்கு வளம் ஊட்டும் வேர்களில் வீக்கம் உண்டாகும்; பின், அங்கே, கரணைகள் தோன்றும். தூரடிப் பயிர்கள் - முளைகள் அதிகமாகும். செடிகளின் வளர்ச்சி குன்றும். ஆகவே, அவை குட்டையாகி விடவும் நேரும். இலை முனைகளிலும் ஓரங்களிலும் மஞ்சள் நிறம் படர்ந்து, பிறகு, அவை உலரவும், உதிரவும் செய்யும்.

நூற்புழுக்களைத் தோன்றச் செய்யாமல் இருக்க, பாத்திகளில் விதைப்பு நடத்துவதற்கு முந்தியோ, அல்லது, நாற்றங்காலில் நடவு செய்வதற்கு முன்பாகவோ ஆறு சதுர மீட்டருக்கு 140 மில்லி என்னும் அளவில் 'மெதாம். சோடியம்’ என்னும்படியான உப்பின் மூலத் தனிமத்தைக் கொண்டு 2, 3 வாரங்களுக்குக் குறையாமல் புகையூட்டலாம். இது முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவும் அமையும். புகையூட்ட வாய்ப்பு வசதி இல்லாமல், போனால், 'டாமிக் 10 ஜி' என்னும் மருந்தை சிகிச்சை முறை விதிகளின் பிரகாரம் ஹெக்டருக்கு 5 கிலோ விதம் துரவலாம். மேலும், வேப்பம்புண்ணாக்கு போன்ற உயிர் இயக்க விளைவு சார்ந்த இயற்கை உரங்களின் நச்சுத்தனம் நூற்புழுக்களைக் கூண்டோடு கைலாசத்துக்கு அனுப்பி, விடும்!

'த்ரிப்ஸ்' பூச்சி இனம்

இந்திய மண்ணுக்கே உரியதான ஏலக்காய்ச் செடியினின்றும் தோன்றுகின்ற ஏலக்காய்க்கு உரித்தான கொடிய நோய்க்கீடங்களில், த்ரிப்ஸ் (Thrips) என்னும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/46&oldid=505951" இலிருந்து மீள்விக்கப்பட்டது