75
சர்வதேச ஏலக்காய் வாணிபத்தை மேன்மையுறச் செய்ய, மத்தியக் கிழக்கில் பாஹ்ரென் நகரில் வாரியத்தின் அலுவலகம் 1981 முதல் செயற்பட்டு வருகிறது.
அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஏலக்காய்ச் சரக்குகள் மீது விதிக்கப்படும் 3% அளவிலான 'செஸ்' தீர்வை வரிகளினின்றும் கிடைக்கின்ற வசூல் தொகைகள் மூலம் வாரியத்தின் நிர்வாகம் மற்றும் வளர்ச்சிப் பணிச் செலவுகள் சமாளிக்கப்படுகின்றன. கூடுதல் நிதி தேவைப்படும்போது, நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் மத்திய அரசும் நிதி உதவிகளை நிர்னயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கேற்ப வழங்கும்.
1983 - 84-ல் வாரியத்தின் கூடுதல் செலவு ரூ. 225.23 லட்சமாக உயர்ந்தது. 1984 - 85 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு நிதி நிலை ரூ. 349.55 லட்சமாக அமையும். 1985 - 86 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்ட மதிப்பீடு ரூ. 540.33 லட்சமாக நிர்ணயிக்கப்படுகிறது.
இந்திய ஏலக்காய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகள் நடப்பு 1985 - 86 ஆம் ஆண்டிலே மீண்டும் பழைய நிலையை அடையவும் 1978 - 79-ல் எய்திய 4500 மெட்ரிக் டன் உற்பத்தி அளவைப் பெறவும், அதே 1978 - 79 ஆம் ஆண்டில் ஏலக்காய் ஏற்றுமதிகளின் வாயிலாக இந்திய நாட்டுக்குக் கிட்டிய ரூ. 58.40 கோடி அந்நியச் செலாவணி வருவாயைத் திரும்பவும் இந்த நடப்பு 1985 - 86 ஆம் ஆண்டிலும் பெற்றுச் சாதனை புரியவும் ஆர்வமும் ஊக்கமும் கொண்டு செயலாற்றி வருகிறது. ஏலக்காய் வாரியம்!
ஏலத்தோட்டச் சாகுபடியின் வாழ்வும் வளமும் தானே ஏலக்காய் வாரியத்தின் செயலாற்றல் திறனுக்குச்