உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏலக்காய்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

சாகுபடியாளர்கள் தங்களுடைய விளைபொருட்களுக்கு லாபகரமான விலைகளை உறுதியுடன் பெறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது;

ஏலக்காய் வேளாண்மையில் அறிவியல் சார்ந்த விஞ்ஞான பூர்வமான நவீனச் சாகுபடி முறைகளை மேற்கொள்ளும் வகையில் விவசாயிகளுக்கு அவசியமான ஆலோசனைகள் மற்றும் நிதி உதவிகளை வழங்குவதோடு, ஏலக்காயின் செயற்பாங்கு மற்றும் மறுநடவுப் பணிகளில் அறிமுகப் படுத்தப்படும் புதிய செயலாற்றல்கள் பற்றி விவசாயிகளிடையே விளம்பரம் செய்வது;

ஏலக்காய் விளைச்சலை மேம்படுத்துவதுடன், விற்பனையையும் ஏற்றுமதியையும் விருத்தி செய்து, ஏலக்காயின் விலைகளை ஒரேசீராக நிலைபெறச் செய்திட வழிவகை காண்பது;

ஏலக்காய்ப் பரிசோதனை மற்றும் தரநிலை நிர்ணய முறைகளில் பயிற்சி அளிப்பது:

ஏலக்காய்ப் பயன் முறையை விரிவடையச் செய்யவும். அதன் மூலம் ஏலக்காய்ச் செலவழிவை முன்னேற்றம் அடையச் செய்யவும் தேவைப்படும் பொது விளம்பரப் பணிகளை இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் தீவிரப்படுத்துவது:

ஏலக்காய்த் தொழிலில் ஈடுபடும் ஏல விற்பனையாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் ஏற்றுமதி வர்த்தகர்களுக்கும் உரிய லைசென்ஸ்–அனுமதிகளை வழங்குவது;

இந்தியாவிலும் கடல்கடந்த வெளிநாடுகளிலும் ஏலக்காயின் விற்பனை வாணிகத்தை அபிவிருத்தி செய்வது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/70&oldid=505980" இலிருந்து மீள்விக்கப்பட்டது