18
பரிகாரங்களை இலக்கியத்திலே அலசாமல் உமார்காயம் மனப்பான்மையுடன் எழுத்தாளர்கள் வாழ்வது. வெயிலுக் கேற்ற நிழல். வீசும் தென்றல் காற்று, கையில் கவிதை நூல், கலசம் நிறைய மது, கலந்து சகிக்கக் கன்னி -- இந்தப் போக்கில் இலக் கியத்தை கையாள்வது. கலசத்திலும் கடவுளைக் காண்கிறோம் என்றும், ஆத்மானு பூதி என்றும் பிதற்றி ஓய்ந்த மண்டபங்களில் பங்கியடிக்கும் பண்டாரங்கள் மாதிரி, வாழ்வுடனும் துன்பத்துடனும், வறுமையுடனும் மூடத்தனத்துடனும் போராட சக்தியின்றி, மக்கள்களை சோம்பேறிகளாக்கும் எழுத்துக்களை வரைவது. இந்தக் கோளாறான வாழ்வுத் தத்துவத்தை நாம் தகர்க்க வேண்டும். இதற்குவழி பொதுஜனக் கல்வி தான்.
ஆனால் இன்றைய இலக்கிய பிரமாக்களில் பலர் 'Mass education is a fallacy' - பொது ஜனக் கல்வி என்பது அர்த்தமற்ற பேச்சு - என்று கூறத்துணிகிறார்கள். இது விந்தையாக ஒலிக்கிறது. ஒப்புக்கொள்ள முடியாதது. பொது ஜனக்கல்வி ஒரு நாளும் சாத்தியமாகாது என்பது தவறு, இந்தியாவின் கதி மோட்சம் ஒவ்வொரு மனிதனின் தளர்ச்சியையும் பொறுத்துத்தான் இருக்கிறது.
2. கதாசிரியரின் தோல்வி மனப்பான்மை, முன்னேற்றத்திலும், பொதுஜன வளர்ச்சியிலும் நம்பிக்கை குறைவு. கிருபானந்தவாரி பிரசங்கம் மூலமாக எவ்வளவோ பேர்களைத் திருப்புகழ் படிக்கும் படி தூண்டமுடிகிறது என்றால், நமது பத்திரிகைகள் முயன்றால் எவ்வளவு அறிவைப் பரப்ப முடியாது எல்லாம் திடசித்தத்தைப் பொறுத்தது.