உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈட்டி முனை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

19 3.எழுத்தாளர்கள் சுற்றுச் சார்புகளுக்கு அடிமையாயிருப்பது. இதனால் பல குழப்பம் ,திகைப்பு. தத்தளிப்பு ஏற்படுகிறது. ஆகவே கலை யிலும் அவை தான் பிரதிபலிக்கின்றன, 4. தூண்டுதல் சக்தி'யில் (Stimulants) அர்த்த மற்ற நம்பிக்கை, எழுத எழுச்சி வேண்டும்...... கலைஞர்களுக்கு பசி வேண்டும் பட்டினி வேண்டும் அவை தான் கிரியா சக்திக்ள் (Driving Forces) அவை இருந்தால் தான் எழுத முடியும் இல்லா விட்டால் எழுத்தாளன் சோம்பேறியாகிவிடுவான் என்று நினைப்பது. என்ன வேடிக்கை ! உலகத்திலே பசியைப் போக்க வேண்டும் என்று எல்லோரும் கூக்குர விடும் போது, ஒரு சிலர் ஆக்கவேலைக்கு அவசிய மானது பசி என்று கூறுவது வேடிக்கையாக இல்லையா? நண்பர் சரியாகச் சிந்தித்திருக்கிறார் என்பதைப் பாராட்ட வேண்டும். நான் சொல்கிறேன் - இன்றைய இலக்கியத் தேக்கத்திற்கு முக்கிய காரணம் இன்றைய எழுத்தாளர்களின் கோளாறான போக்குதான். அவர்கள் மனோபாவத்தை இரண்டு விதமாகப் பகுத்துவிடலாம். 1. தாங்கள்-இலக்கிய பிரமாக்கள்-உயர்ந்த ஜந்துக்கள். தங்களுக்கு சிகர் தாங்களே தான். தாங்கள் அறியவேண்டியது ஒன்றுமே கிடையாது. சொல்லவேண்டியதை எங்கள் இஷ்டம் போல் தான் எழுதுவோம். படித்தால் படிக்கட்டும்; படியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/21&oldid=1368974" இலிருந்து மீள்விக்கப்பட்டது