பக்கம்:அமுதவல்லி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 87

உருவத்தைக் காட்டி எனக்குப் பழக்கப் படுத்தினாள், என் னையே என்னால் நம்ப முடியவில்லை!

ஒன்பதாவது, பத்தாவது அதிசயமா இது?

‘வாழ்ந்து காட்டியவர்கள் என்று நாம் சிலரைப் பகுத்துச் சொல்வது உண்டல்லவா? அவர்களுக்கு அப்படிப்பட்ட பட்டப் பெயரை நாம் ஏன் சூட்ட நேரிடுகிறது? கேள்விகள் இல்லையென்றால், வாழ்வு இல்லை. அதுபோலவே வாழ்வு இல்லையென்றால் அப்பால், வினாக்களுக்கும் அலுவல் கிடையாது. இத்தகைய தர்க்க ரீதியான வாதத்தில் முனைந்து, வாழ்ந்து காட்டியவர்களைப் பற்றி ஒரு விளக்கம் சொல்லத் தான் ஆசைப் படுகிறேன். வாழ்வின் ஆரம்பக் கட்டத்தில் அடியெடுத்து வைத்து, வாழ்க்கையை அவர்கள் படிக்கப்போய், வாழ்க்கை அவர்களைப் படித்து முடித்து, கடைசியில் வாழ்வையும் இம் மனிதர்களையும் ஆடு காய்களாக்கி இறைவன் விளை யாடி-விளையாட்டுக் காட்டி முடிந்ததும், இவர்களுக்கு உண்மைகள் பல பளிச்சிடுகின்றன. உண்மைகள் பளிச்சிடக்கூடிய நேரத்தை அற்ப சொற்பமானதாகக் கணிக்கலாமா? பொன்னான நேரம் என்று எடுத்த தற்கெல்லாம் எடுத்து வீசிச் சொல்கிறார்களே, அப்படிப்பட்ட நேரம் அது. அப்போது தான் வாழ்ந்து காட்டியவர்கள்’ என்கிற பட்டத்தைச் சூட்டும் சூழல் அவர்களைச் சுற்றிலும் உருவாகிறது, இத்தகைய கஷ்ட நஷ்டங்களைத் தம்முடைய சொந்த அனுபவங்களாக ஏற்றுக் கொண்ட அந்தத் துணிச்சல் இருக்கிறது. பாருங்கள். அதற்காகத்தான் அவர்களுக்கு அத்துணை மதிப்பு, கெளரவம்.

இந்தப் பட்டியலில் எனக்கு மட்டிலும் இடம் கிடைக்காமல் இருக்க முடியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/89&oldid=1375335" இலிருந்து மீள்விக்கப்பட்டது