பக்கம்:அமுதவல்லி.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ் ஆறுமுகம்

227


இப்ப தொட்டு நீங்க தானுங்க எனக்குச் சதம். ஒங்களைத் தானுங்க அல்லாத்துக்கும் நானு நம்பியிருக்கேன்! நீங்க எஞ்சாமி கணக்குத்தான். எங்க சாமியே தான் மஞ்சள் பூசிய வதனம் ஒளிர்த்தது.

அவளால் மேற்கொண்டு பேசமுடியவில்லை.

‘நானு ஒன்னை நம்புறேன். அதொப்ப நீயும் என்னை நம்பு, செம்பவளம்! இப்படியொரு பாக்கியம் எனக்கு எழுதிப் போட்டிருக்குமினு நானு சொப்பனத்திலே கூட ரோசிச்சது .ெ கிடையாது!’ நானு கொடுத்து வச்சவன்! அதானாக்கும் ஒன்னை எடுத்துக் கிட்டேன்! என்று சுகத் தெம்புடன் பேசி, அதே லயிப்பின் உணர்வுக்கிறக்கத்தின் ஊடாக. அவளுக்குத் திருப்பூட்டினான் காளியப்பன்.

கண்ணீரும் கண்ணீரும் கலந்தன.

பிறகு, சிரிப்பும் சிரிப்பும் ஒன்றின.

ஒன்றாய் ஊர்ந்த வான் பிறை, சத்தியத்துக்கு ஒர் ஆதரிசமாக-தர்மத்திற்கு ஒரு சாட்சியமாக விண்

னிடைப் பொலிந்து மண் ணிடைத் தவழ்ந்து கொண் டிருந்தது.

‘பசும்பாலை நல்ல பதத்தோடே காய்ச்சி’ யாச்சா?”

ஓ.

வெத்திலை பாக்கு இருக்கில்ல?”

ம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/229&oldid=1378439" இலிருந்து மீள்விக்கப்பட்டது