பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்திசாரர். #67 கின்றான். கணிகண்ணன் அதற்கு உடன்படாமல் என் ஆசிரியர் இகவுலக இன்பங்களையே விரும்பி நிற்பவரைக் கண்ணெடுத்துப் பார்த்தலும் அரிது" என்று மறுத்து விடுகின்றான். அரசன் ஒன்றும் தோன்றாமல் வருந்திய நிலையிலிருக் கின்றான். இந்நிலையில் அமைச்சர்கள் வந்து அரசனைத் தேற்றுகின்றனர். இக் கணிகண்ணனே தெய்வப் புலமை யுடையவன்; இவன் வாயினால் பாடிய படியெல்லாம் பல அற்புதங்கள் நிகழ்ந்து வருகின்றன; ஆதலின் இவனால் பாடப் பெற்றாலும் தங்கள் விருப்பம் நிறைவேறுதல் கூடும்” என்று உறுதி கூறுகின்றனர். அங்ங்ணமே அரசன் அடுத்த நாள் அக் கணிகண்ணன் அரண்மனைக்குப் போந்தபோது, "எனக்கு அழியாத இளமை வந்தெய்து மாறு கவிபாட வேண்டும்' என்று வேண்டுகின்றான். அவன், அரசர் பெருமானே, நான் எப்போதும் நாராயணனைத் தோத்திரம் செய்வேனேயன்றி, நரனைத் துதியேன்” என்று மறுமொழி தருகின்றான். பின்னும் மன்னவன், தன்னைப் பாடுமாறு கணிகண்ணனைப் பலகால் திர்பந்திக் கின்றான். என்ன செய்வான் கணிகண்ணன்? அவனும், ஆடவர்கள் எங்ங்ன் அகன்றுஒழிவார் வெஃகாவும் பாடகமும் ஊரகமும் பஞ்சரமா-டிேயமால் நின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றோ மன்றார் பொழில்கச்சி மாண்பு என்று ஒரு வெண்பா பாடுகின்றான். கொற்றவன் சினங் கொண்டு நம்மைப் பாடு என்றால் நகரத்தைப் பாடு கின்றாய். இனி நீ இவ்வூரில் இருக்கலாகாது. நகரத்தை விட்டு அகன்று போ என்று ஆணையிடுகின்றான். கணி கண்ணன் ஆழ்வாரிடம் சென்று நடந்தவற்றை நவின்று, அேடியேனுக்கு விடை தந்தருள வேண்டும்’ என்று விண்ணப்பம் செய்கின்றான்.