உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

97

"ஏரியா விற்பனை கணிசமாக ஆகற மாதிரி டிஸ்ட்ரிபியூட்டர்ஸுக்குப் புடிச்ச ஹீரோவைப் போடாட்டியும் கஷ்டம். டிஸ் டிரிப்பியூட்டருக்குப் புடிச்ச ஹீரோவுக்குக் கராத்தே தெரியாது. கராத்தே தெரியாத அந்த ஹீரோவை வச்சு இந்த சப்ஜெக்டை எடுக்கறது முடியாது. அதனாலே ஹீரோவைக் காப்பாத்தி உதவி செய்யற அவனுடைய தோழனுக்குத்தான் கராத்தே, குங்ஃபூ எல்லாம் தெரியும்னு கதையையே மாத்திட்டா என்னன்னு பார்க்கிறோம்?”

“கதை இன்னும் எழுதப்படாத போது எப்படி மாற்றுவீர்கள்?”

“கதை என்ன பெரிய கதை? எழுதறதுக்கு முந்தியே மாத்திட்டாப் போச்சு!”

“அடடே! பரவாயில்லையே! எத்தனை முன்யோசனை உங்களுக்கு?”

“ஒண்ணா ரெண்டா, இந்த லயன்லே பத்து வருஷ செர்வீஸ் ஆச்சே?”

“பெரிய அநுபவம் தான்”

“ஹீரோவோட தோழன் ரோலுக்கு உங்களை டிரை பண்ணிணா என்னன்னு.......”

“என்னையா! எனக்கு நடித்தே பழக்கமில்லையே..”

“நடிப்பு என்ன, பெரிய நடிப்பு? ரெண்டு வாட்டி ஸ்டுடியோவுக்குள்ளார வந்து போனீங்கன்னா அதுவும் தானா வந்துட்டுப் போவுது...”

“அவ்வளவு சுலபமா”

“சுலபம்தான். இந்த கராத்தே சப்ஜெக்ட் விஷயமா இன்னிக்கி ராத்திரி ஒன்பது மணிக்கு ஹோட்டல் குபேராவில் ஸ்டோரி டிஸ்கஷன் வச்சுருக்கோம். ஒன்பதாம் நம்பர் ஏ.ஸி. சூட். நமக்கு ஒன்பதுதான் ராசியான நம்பருங்க. அதுக்கு நீங்களும் வந்தீங்கன்னா முடிவு பண்ண வசதியாயிருக்கும்."