உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

சாயங்கால மேகங்கள்

"எனக்குக் குறுக்கு வழியில் நம்பிக்கை இல்லை சார்! வம்புக்கும் வழக்குக்கும் நான் தயார்?” என்றான் பூமி.

“கார்ப்பரேஷனை ஒரு கை பார்க்கலாம். எல்லாம் செய்து டைப் பண்ணி வைக்கிறேன். நாளைக் காலையில் வாருங்கள்! வக்காலத்தில் கையெழுத்துப் போடவேண்டிருக்கும் என்றார் அந்த வழக்கறிஞர். பூமி அதற்கு முழு மனத்தோடு சம்மதித்தான்.


24

ஒவ்வொரு பெண்ணின் திருமணமும் அவள் திருமணம் முடிந்தவுடன் அவளுடைய சொந்தத் தாய் தந்தையையும் மீதியுள்ள குடும்பத்தையும் நடுத்தெருவில், கொண்டு வந்து நிறுத்தி விடுகிற அளவு வரதட்சிணைக் கொடுமையைக் கொண்டிருக்கிறது.


வாக்களித்தவாறே கார்ப்பொரேஷன்காரர்கள் ஹோட்டலை மூட முடியாதபடி அந்த வழக்கறிஞர் ஸ்டே வாங்கிக் கொடுத்து விட்டார். பின்பு தொடர்ந்து நடந்த வழக்கிலும் பூமிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். மாநகராட்சியின் ஹோட்டலை மூடும் உத்தரவு செல்லாது என்று தீர்ப்புக் கிடைத்தது. இந்த வழக்கின் மூலமும் இந்தத் தீர்ப்பின் மூலமும் அந்த வட்டாரத்தில் இருந்த எல்லா உணவு விடுதிகளுக்குமே விடிவு பிறந்தது. எல்லாருக்கும் ஓரளவு கண் திறந்தது. தைரியமும் வந்தது.

“ஒழுங்காக இல்லாதிருந்ததைக் கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் லஞ்சம் கொடுக்க இணங்கிப் பிறகு ‘லஞ்சம் கொடுத்துச் சமாளிப்பதற்கு வழி இருக்கிறது’ என்ற நம்பிக்கையிலேயே தொடர்ந்து ஒழுங்காக இல்லாமல் வாழப்-