பக்கம்:புத்த ஞாயிறு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 புத்த ஞாயிறு

என்னெதிரே நின்ற காலத்திலும் சரி, இப்போதும் சரி எனக்கு நீ ஒரேமாதிரித்தான் தோன்றுகிருய்! ஏனென் முல் நான் உன் உடலை மதிக்கவில்லை. ஆத்மாவையே பரிபூரணமாக மதிக்கிறேன். அன்று நீ இருந்த கோலத் தில் உனக்கு எல்லாருமே போட்டி போட்டுக் கொண்டு. உதவ முன் வந்திருப்பார்கள். இன்ருே நான் மட்டுமே. உனக்கு உதவமுடியும். உனக்கு உதவி செய்யத் தேவைப்படுகிற காலத்தில்தான் உதவி செய்ய வருவேன் என்று வாக்களித்திருந்தேன். எனது அந்த வாக்கைக் காப்பாற்ற வாய்ப்புக் கொடு. மறுக்காதே.

கணிகை : வாக்கைக் காப்பாற்றுவதற்காக இந்த அவல நிலையிலும் எனக்கு முன்னுல் வந்து நிற்பது உங்களது பெருந்தன்மையைக் காண்பிக்கிறது. ஆனால் உங்களது பெருந்தன்மையை ஏற்கிற அளவு நான் தகுதி உடையவள் என்ற நினைவுதான் எனக்கில்லை.

பிட்சு : போதும் உலக அறவியில் கொண்டுபோய் விடு

கிறேன். வா.

(பிட்சு அவளைத் தொட்டுத் துளக்குதல்) கூட்டத்தினர் : ஆகா! இவருக்குத்தான் எத்தனைக் கருணை: அழுகிக் கிடக்கும் நோயை அருவருப்பின்றித் தொட்டுத் துரக்குகிருரே, என்ன பெருந்தன்மை? எத்தனை நல்ல உள்ளம்.! எவ்வளவு பெரிய பண்பாடு. . கணிகை ஐயோ வேண்டாம்! விட்டு விடுங்கள். சாகிற வளுக்கு வாழ்வு எதற்கு? அழுகிப் போனவளுக்கு. ஆதரவு எதற்கு , , . பிட்சு : வா...மெல்ல...மெல்ல...உன்னே...உலக அறவியில் பத்திரமான இடத்திலே உடனே கொண்டு போய்ச் சேர்க்கிறேன். .

. (சோகமான பின்னணி ஒலி) (திரை) -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/46&oldid=597409" இலிருந்து மீள்விக்கப்பட்டது