பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நடையில் சங்கப் பாடல்கள் 227

இன்னொரு பாடல்: இது குறுந்தொகை (265) யில் கருவூர்க்கதப் பிள்ளை பாடியது. தோழி கூற்றாக அமைந்தது. காந்தளங் கொழுமுகை காவல் செல்லாது வண்டுவாய் திறக்கும் பொழுதில் பண்டும் தாமறி செம்மைச் சான்றோர் கண்ட கடனறி மாக்கள் போல இடன்விட் டிகழ்தளை யவிழ்த்த ஏகல் வெற்பன நன்னர் நெஞ்சத்தன் தோழி நின்னிலை யான்றனக் குரைத்தனென் ஆகத் தான்நா விைணைஇஃது ஆகா வாறே. விளக்கம்: களவு மனத்திலே ஒழுகிய தலைமகன் பொருள் தேடப் பிரிந்து போகின்றான். திருமணச் செலவுக்கும் திருமணம் ஆன பின் வாழ்க்கைச் செலவுக்கும் பெரும் பொருள் வேண்டுமல்லவா ? அதற்காகத்தான் தலைவன் பிரிகின்றான். அதுகண்ட தோழி தலைவியைப் பார்த்து அவளுக்குச் சமாதானம் கூறுகின்றாள்.

இக்கருத்தினைத் தெளிவாக விளக்கும் பாங்கில் பாவேந்தர் எளிமையான முறையில் அமைத்த பாடல்:

காந்தளின் இதழ்க்கதவு திறக்கும் வரைக்கும் காத்திளது வண்டு பாத்திறம் காட்டத் - தக்கோர் வருகை கண்டெதிர் கொண்ட மிக்கோர் போல மெல்லிதழ் திறந்தது அத்தகு சிறந்த மலையுடை அன்னவன் நல்ல நெஞ்சம் உடையவன் என்க; பெருமணம் புரியாது பிரிந்ததை உன்னிக் கதறும் உன்நிலை கழறினேன் மணக்கவே என்றாள் மற்றவன் நாணியே’ சில குறுந்தொகைப் பாடல்களின் கருத்தை இசைப்பாடல்கள் வடிவினும் இலகுவாகப் பொருள் புரியும் பாங்கில் அமைத்துள்ளார் நம் கவிஞர். அத்தகைய பாடல்களை ஈண்டுக் காட்டுவேன்.

6. காதல் பாடல்கள் - பக்கம் 129

16