இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
207
- இது தான் உலகமடா!-மனிதா
- இது தான் உலகமடா!-பொருள்
- இருந்தால் வந்து கூடும்-அதை
- இழந்தால் விலகி ஒடும்!
- உதைத்தவன் காலை முத்தமிடும்!
- உத்தமர் வாழ்வைக் கொத்தி விடும்!
- உதட்டில் உறவும் உள்ளத்தில் பகையும்
- வளர்த்தே அறிவை மாய்த்து விடும்!
- பொருள்-இருந்தால் வந்து கூடும்!
- அதை இழந்தால் விலகி ஓடும்!(இது)
- உழைப்பவன் கையில் ஓடு தரும்!
- உணவுக்குப் பதிலாய் நஞ்சைத் தரும்!
- பழியே புரியும் கொடியோன் புசிக்க
- பாலும் பழமும் தினம் தேடித் தரும்!
- பொருள்-இருந்தால் வந்து கூடும்!
- அதை இழந்தால் விலகி ஓடும்!(இது)