இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
206
(தொகையறா)
- அறிவிருக்கும் அன்பிருக்கும் பண்பிருக்கும் சிலரிடம்!
- அழகிருக்கும் பணமிருக்கும் பகட்டிருக்கும் பலரிடம்!
பாட்டு
- இது தெரியும்!
- அது தெரியாது!
- ஏழடுக்கு மாளிகையில் இருக்கிற பேர்வழிக
- எத்தனையோ தப்புத்தண்டா பண்ணுவாங்க!
- ஏழை எளியவங்க இல்லாத காரணத்தால்
- ஏதோ சிறு தவறு பண்ணுவாங்க!
- ஜாலி மைனர்கள் விசிறி மடிப்பிலே
- கிழிசல் ஒரு கோடி இருக்கும்!-தொழி
- லாளி துவைச்சு உடுத்தும் உடையிலே
- தையல் பல ஓடி இருக்கும்!
- கனதனவானின் நெஞ்சில் எந்நாளும்
- கபடம் பொறாமை எனும் அழுக்கிருக்கும்!
- கள்ளம் அறியாத பாட்டாளி மேனியில்
- உள்ளபடி வேர்வை அழுக்கிருக்கும்!
- (இது)
- உள்ளபடி வேர்வை அழுக்கிருக்கும்!
அல்லி பெற்ற பிள்ளை-1959
- இசை : K. V. மகாதேவன்