பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அண்டகோள மெய்ப்பொருள் கொள்கை) என்னும் ஸ்ரீ கீதையால் ஞானி பகவானுக்கு ஆத்மாவாதல் தெளியலாம். தீயவுயிரையுஞ் சுற்றமென்றது, வெறுக்கின்ற அவர்பாலும் உறைதலானும்அவரையும் சன்ம சன்மாந்தரங் காத்துச் சேறலானும், அவர்க்கும் அருள இருக்குக் தாயும் தந்தையுந் தானாதலானும், அவரையும் மகவென்று கருதித் திருத்தமுயறல் காட்டியவாறு. தாய் தந்தை எவ்வுயிர்க்குந் தான் . (பெரிய திருவந்தாதி, உ௩) என இவ்வாழ்வாரே அருளிச்செய்தலா னிதனுண்மை யுணர்க. பிதா மாதாச ஸர்வஸ்ய ' (விதா 2T_互TJ门 మిvమి-ఎn్ళ) என்பது மஹாபாரதம். சுத்தஸ்த்வநிஷ்டரான பரமைகாந்திகளைத் தொகுத்து நித்திலத்தன்ன வெண்மணற் பரப்பிற் றென் மிகு பெருமரம் என இயைக்க தொகுத்தப் பரப்பில் மிகுமாம் என்க. 4. நித்திலத்தன்ன வெண்மணற் பரப்பில் என்றது முத்துக்களை யொத்த வெண்மையான ஒளியையுடைய பரந்த மணற்பிரதேசத்தில் எ-று. வெண்மையும், ஒண்மையும், குளிர்த்தியும், உயர்த்தியும், தூய்மையும், அருமையும் முதலிய சிறப்பால் நித்திலத்தன்ன என்றார். வெண்மணற் பரப்பு என்றது ச்வேதத்வீபம் எ-று. இது, திருப்பாற்கடலின் வடகரையிலுள்ள மஹா பரிசுத்தஸ்தலவிசேஷம் திருப்பாற்கடல் கொழித்த நித்தி லத்திற்கும் இப்பரப்பில் வெண்மணற்கும் வேற்றுமை காண

அரியதாய் ஒரே சுவேதமயமா யுண்மையால் இவ்வாறு கூறப்பட்டது. இதனைப் பாரதம் சாந்திபருவம் (848) பாற்கடலின் வடபாகத்திற் பேரொளி நிறைந்த ச்வேதத்வீபம் இருப்பது; அங்குள்ள மக்கள் சந்திரனையொத்த காந்தியினர்; நாராயண பராயணர்; அவ்வன்பர் புருஷோத்தமனை ஏகாந்த