35. 56. 37. 38. 39. 40. 41. 42. 45. ـــــقث சிறிய பூச்சிகளுமே வாழ்பவை. 3. பனிச்சமவெளித் தாவரம் - முனைப்பகுதி. 4. சீரான தட்ப வெப்ப நிலைக் காடுகள். 5. வெப்ப மண்டல புல்நிலம். 6. பாலை நிலம் - வறண்ட தட்ப வெப்ப நிலை. பருவங்கள் ஏற்படக் காரணம் என்ன? கதிரவனைச் சுற்றிப் புவி செல்லும்பொழுது, அதன் வேறுபட்ட பகுதிகள் ஒரு நேரத்தில் சில மாதங்கள் கதிரவனை நோக்கிச் சாயும். கதிரவனை நோக்கிச் சாயும் பகுதி கோடை சாயாத பகுதி மாரி. சைபீரியாவில் நிலவும் வெப்ப நிலை என்ன? ஓராண்டில் 70 செ. முதல் 37°செ வரை உள்ளது. பருவநிலை மாறுபடுவதற்குத் தகுந்த எடுத்துக்காட்டுகள் தருக. ஐரோப்பாவில் கோடையாய் இருக்கும்பொழுது ஆஸ்திரேலியாவில் மாரிக்காலமாக இருக்கும். வானிலை என்றால் என்ன? காற்றுவெளி நிலைமை, கதிரவன் ஒளி, வெப்பநிலை, மப்புநிலை, ஈரநிலை, காற்றழுத்தம் ஆகிய காரணிகளை உள்ளடக்கியது. வானிலை முன்னறிவிப்பு என்றால் என்ன? அன்றாடம் வானிலை நிலையம் திரட்டும் வானிலைச் செய்திகளின் அடிப்படையில் அடுத்த நாள் வானிலை எவ்வாறு இருக்கும் என்று முன்கூட்டித் தெரிவித்தல். இவை எவ்வாறு உடனுக்குடன் தெரிவிக்கப்படுகின்றன? வானிலை நிலாக்கள் மூலம் தெரிவிக்கப்படுகின்றன. வானிலை இயல் என்றால் என்ன? வானிலை பற்றி விரிவாக ஆராயும் துறை. செயற்கைக் கோள்களால் நன்கு வளர்ந்துள்ளது. வானிலை நிலாக்கள் என்றால் என்ன? வானிலைத் தொடர்பாகச் செய்திகளைத் திரட்ட ஏவப் பட்டவை. எ-டு. டிராஸ், இன்சட் வானிலை முன்னறிவிப்பில் ஊடகங்களின் பங்கு என்ன?
பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/44
Appearance