பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



41
57. மங்கையர்க் கரசியார்

சிவ நெறி தழைக்க வேண்டிச் சம்பந்தப் பெருமானது துணை கொண்டு அவரால் பாண்டி நாட்டிற் சைவம் பெருக வைத்த பெண்ணினல்லாள் மங்கையர்க் கரசியாரின் அடிகளைப் போற்றுவாம்.

58. நேச நாயனார்

சாலியர் குலத்தில் உதித்துக் தம் மனம் சிவன் திருவடியைச் சிந்திக்கவும், தமது நா ஐந்தெழுத்தோதவும், தமது கை சிவன் திருப்பணிகள் செய்யவும் வைத்துச் சிவனடியவர்களுக்கு உடை, கோவணம்,கள் செய்து தந்த நேச நாயனாரை ஏத்துவாம்.

58. கோச்செங்கட் சோழ நாயனார்

முற்பிறப்பிற் சிலந்தியாயிருந்து இறைவருக்குப் பந்தரிட்டேன்; இந்தப் பிறவி இடர் தீர வந்துள்ளேன் -என மதித்து இறைவனுக்கு 'மாடக் கோயிகள் பல அமைத்த கோச் செங்கட் சோழரது கழல்களைப் போற்றுவாம்.

60. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்

மதுரையில் இறைவன் ஆனைப்படி யிடப்பட்ட பொற் பலகையில் இருந்து இசை பல உரைத்தவரும், இலக்குமி பூசித்த திருவாரூரில் புதிதாய் இறைவன் தமக் கென்றமைத்த வடவாயில் வழியாகச் சென்று இறைவனைத் தொழப் பெற்றவரும், சம்பந்தப் பெருமானது பாடல்களை யாழினில் அமைத்து இசை பொவிய வாசித்தவரும், அப்பெருமானது திருமணத்தில்