இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5. மீன்களின் பொருளாதாரச் சிறப்பென்ன?
- 1. சிறந்த உணவு.
2. புரதம் மிகுந்துள்ளது.
3. மீன்பிடித்து விற்பனை செய்வது ஆதாயமுள்ள தொழில்.
6. நுரையீரல் மீன்கள் என்பவை யாவை?
- நன்னீரில் வாழ்பவை. மூன்று பேரினங்கள் உண்டு. புரடாப்டிரிஸ், லியோசெரட்டோடஸ், லெப்பிடாப்டிரஸ்.
7. பறக்கும் மீன் என்றால் என்ன?
- இது ஒர் எலும்பு மீன். தன் இடுப்புத் துடுப்புகள் மூலம் நீரிலிருந்து தாவிக் காற்றில் சிறிது நேரம் இருக்கும்.
8. காட்மீனின் சிறப்பு யாது?
- இது ஒரு வகை உணவு மீன். இதன் ஈரலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வைட்டமின் D உள்ளது.
9. கடல் குதிரை என்றால் என்ன?
- குதிரை ஒத்த தலை இருப்பதால் இதற்கு இப்பெயர். வாலுள்ள சிறிய மீன்.
10. நிலம் நீர் வாழும் விலங்குகளின் சிறப்பியல்புகள் யாவை?
- 1. இரு நிலை வாழ்விகள்.
- 2. வால் இல்லை.
- 3. உடல் வெப்பநிலை சூழ்நிலைக்கேற்ப மாறுபடும்.
- 4. கருவுறுதல் வெளியே நீரில் நடைபெறுவது.
- 5. முன்கால்களில் குறுகலானவை, பின்கால்கள் நீண்டவை.
- 6. பின் கால் விரல்களில் விரல் இடைத்தோல் உண்டு.
- 7. தலைப்பரட்டையாக இருக்கும் பொழுது செவுள்களாலும் முதிர்ச்சி நிலையில் நுரையீரல்களாலும், தோலினாலும் மூச்சுவிடுபவை.
11. வால் என்றால் என்ன?
- மலப்புழைக்கு பின்னுள்ள நீட்சி. எல்லாத் தண்டு வட உயிர்களுக்கும் வால் உண்டு.
12. விலாங்கு மீன் என்றால் என்ன?
- 1. நீண்டதும் நொய்ந்ததுமான எலும்புமீன்.