டாக்டர். பூவணணன்
99
'விழா தந்த விழிப்பு' கதை நூலைப் படிப்பவர் மனத்தில் ஒரு புள்ளி விவரம் ஆழமாகப் பதியும். மேற்கோள் பதியலாம். மேலான நிகழ்ச்சி பதியலாம் நகைச்சுவைத் துணுக்குப் பதியலாம்! ஒரு புள்ளி விவரம் பதியுமா?
பதியும்!
இந்தப் புள்ளி விவரத்தைப் படிக்கும் எவரும் ஒப்புக் கொள்வர்.
சிறுசேமிப்பு விழாவின் தலைவரான டாக்டர் நாதன் தனது பேச்சில் இவ்வாறு கூறுகிறார்:
"இன்றையப் பேச்சுப் போட்டியில் இங்கு பேசிய எல்லா மாணவர்களுமே சிறுசேமிப்புப் பற்றி வெகு அழகாகப் பேசினார்கள். சிறுதுளி பெரு வெள்ளமாவது போல், சின்னஞ்சிறு சேமிப்புக்கூட நாளடைவில் பெருந்தொகையாக உருவெடுக்க முடியும்."
"பாரதப் பிரதமராக இருந்த அமரர் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள், 'வீட்டு நலனுக்காகவும், நாட்டு நலனுக்காகவும் ஒவ்வொரு இந்தியனும் 3 பைசா நாள்தோறும் சேமிக்க வேண்டும்' என்றார். அப்படிச் சேமித்தால் என்ன ஆகும்?
"ஒவ்வொரு இந்தியனும் ஒரு நாளைக்கு 3 பைசா வீதம் சேமித்தால் 65 கோடி இந்தியரின் சேமிப்பு 195 கோடி காசுகள் ஆகும். 30 நாட்களுக்குச் சேமித்தால் 5830 கோடி காசுகள் ஆகும். 12 மாதங்களின், அதாவது ஒரு ஆண்டின் 69960 கோடி காசுகள் ஆகும். அதாவது நாளைக்கு 3 காசு வீதம் சேமித்தால் ஆண்டில் சுமார் 700 கோடி ரூபாய்கள் சேமிக்கலாம்." பக்கம் : 63-64
இந்தப் புள்ளி விவரம் பனித்துளி போலத் தொடங்கும் சேமிப்பு, பனிமலை இமயமாக எழுந்து உயர்ந்து உறு