உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12
நோய்களை எப்படித் தடுப்பது என்பதைப் பற்றி ஆராய்வது.

22. மூக்கியல் என்றால் என்ன?

மூக்கின் உள்ளமைப்பு, வேலை, அதில் ஏற்படும் நோய்கள் ஆகியவற்றை ஆராயும் மருத்துவப் பிரிவு.

23. கதிரியல் என்றால் என்ன?

மருத்துவத்துறையில் பயன்படுமாறு கதிரியக்கத்தையும் கதிர்வீச்சையும் ஆராயுந் துறை.

24. கதிர்நோக்கல் என்றால் என்ன?

எக்ஸ் கதிர்களைக் கொண்டு நோய்களை ஆராய்தல்.

25. எலும்பியல் என்றால் என்ன?

அறிவியல் முறையில் எலும்புகளை ஆராயும் மருத்துவத் துறை.

26. எலும்பு நோய் இயல் என்றால் என்ன?

எலும்பு நோய்களை ஆராயுந் துறை.

27. கண்ணியல் என்றால் என்ன?

கண்ணின் அமைப்பு, வேலை, நோய், குறைகள் முதலியவற்றை ஆராயுந் துறை.

28. முடநீக்கியல் என்றால் என்ன?

எலும்பு மண்டலத்தின் வேலையை மீட்டலும் பாதுகாத்தலும் பற்றிய அறுவை இயலின் பிரிவு. தவிர,எலும்புப் புழக்கங்கள், அவற்றோடு அமைந்த உறுப்புகள் ஆகியவை பற்றியும் ஆராயுந் துறை.

29. நரம்பியல் என்றால் என்ன?

நரம்பு மண்டலம், அதன் வேலைகள், கோளாறுகள் முதலியவற்றை ஆராயுந்துறை.

30. நரம்பு நோய் இயல் என்றால் என்ன?

நரம்பு மண்டல நோய்களை ஆராயுந்துறை.

31. தடய அறிவியல் சிறப்பு என்ன?

குற்றம் நடந்த இடத்தில் திரட்டப்படும் தடயப் பொருள்களை ஆராய்ந்து குற்றவாளிகளைக் கண்டறியக் காவல்துறைக்கு உதவுந்துறை. இதற்கு டிஎன்ஏ விரல் பதிவும் பெரிதும் உதவும்.