அ
முகவுரை
5. இந்நூலின் பொருளடக்கத்தைப் பற்றியும் அமைப்பைப் பற்றியும் சில கூறவேண்டியுள்ளன :-
(i) பதிக எண்களின் விளக்கம்: ஸ்ரீ சம்பந்தப் பெருமானது தேவாரப் பாக்கள் மூன்று திருமுறைகளி லுள்ளனவும் திருவிடைவாய்ப் பதிகத்தைச் சேர்த்து 384 பதிகங்களாகின்றன. பண்முறைத் தேவாரப்பதிப்பின்படி ஒன்று முதல் 384 வரையும் பதிகங்களுக்கு வரிசையாய் எண்ணிட்டு அவ்வெண்களே இவ் வாராய்ச்சியிற் குறிக்கப்பட்டுள.
ஒரு விஷயத்தின் நேரே 121-4 என எண்ணிருந்தால் முதல் எண் 121-பதிகத்தையும் பின்னுள்ள எண் 4-அப் பதிகத்தில் அவ்விஷயம் வரும் பாட்டின் எண்ணையும் குறிக்கும். ஏதேனும் ஒரு விஷயம் மூன்று இடங்களுக்கு மேல் ஒரு பதிகத்தில் வந்தால் பதிக எண் மாத்திரம் குறிக்கப்படும்; பாட்டின் எண்கள் குறிக்கப்பட மாட்டா; இன்ன எண்ணுள்ள பதிகம் இன்ன தலத்துத் தேவாரம் என்று தெரிவதற்காகப் 'பதிக எண்களின் விளக்கம்' என்னும் ஒர் அட்டவணை (பக்கம் கo-கக) அச்சிடப்பட்டுளது. அதில் இன்ன எண் இன்ன தலத்துப் பதிகம், அப்பதிகத்தின் முதல் இன்னது என விளக்கப்பட்டுளது. உதாரணமாகப் பக்கம் 52இல்-9- அரசர் என்னும் தலைப்பில் 'பஞ்சவர் 62-5 எனக் குறிக்கப்பட்டுளது. 62 ஆம் பதிகத்தில் 5 ஆவது பாட்டிற் பஞ்சவர் சொல்லப்பட்டிருக்கிறார் என்பது இதன் பொருள். 62 ஆம் பதிகம் எது எனத் தெரியவேண்டில் 'பதிக எண்களின் விளக்கம்' என்னும் அட்டவணையில் 62 என்னும் எண்ணுக்கு நேராகப் பார்த்தால்-அது திருக்கோளிலிப் பதிகம் என்பதும் 'நாளாய' எனத் தொடங்கும் பதிகம் அது என்பதும் ஏற்படும். ஆதலால், ஸ்ரீ சம்பங்தப் பெருமானது தேவாரம் எந்தப் பதிப்பு கையிலிருந்த போதிலும் இவ்வாராய்ச்சி நூலே எளிதில் உபயோகிக்கலாம்.
(ii) தலங்களை அகராதி முறையாக எழுதி அவ்வத்தலங்களுக்குரிய பதிக எண்கள் தலத்துக்கு நேரே குறிக்கப்பட்டுள ஒரு அட்டவணையும் (பக்கம் க-௯) அச்சிடப்பட்டுள்ளது.
(iii) 'கணபதி' என்னுந் தலைப்பை முதலாவதாக்கிப் பிற எல்லாத் தலைப்புக்களையும் அகராதி முறையாக அமைத்து இந்நூல் அச்சிடப்படுகின்றது. எவ்வெத் தலைப்புக்கள் இவ் வாராய்ச்சியில் I