பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316

பல்லவர் வரலாறு



(1) யாப்பருங்கல விருத்தியுரையை நன்கு ஆராயின் பல்லவர் காலத்திற் பல யாப்பிலக்கண நூல்கள் வடநூல் வழித் தமிழ் ஆசிரியர் பலரால் செய்யப்பட்டன என்பது போதரும். அவற்றினை விரித்துக் கூறாதுபெயர்கள் மட்டுமே இவண் தரப்பெறும். விரிவை வேறிடத்துக் காண்க. சங்கயாப்பு, பாட்டியல் நூல், மாபுராணம் என்றயாப்புநூல்கள் இக்காலத்தன. இவையன்றி மேற்கூறிய உரையால் இலக்கிய நூல்கள் பல்லவர்காலத்து இருந்தன என்பது தெரிகிறது. அவையாப்பருங்கல விருத்தி உரையாசிரியர் காலத்திலும் இருந்தன என்பது அறியக் கிடக்கிறது. அவை முத்தொள்ளாயிரம், புராண சாகரம், கலியான கதை, குடமூக்கிற் பகவர் செய்த வாசு தேவனார் சிந்தம். அடிநூல், அணி இயல், அமர்தபதி, அரசசந்தம், அவிநந்தமலை, ஆசிரியமுறி, காலகேசி, இரணியம், சயந்தம், தும்பிப்பாட்டு, தேசிகமாலை, பசந்தம், பாவைப்பாட்டு, பிங்கலகேசி, புணர்ப்பாவை, பெரியபம்மம். பொய்கையார் நூல், (களவழியன்று), போக்கியம், மணியாரம், மந்திர நூல், மார்க்கண்டேயனார் காஞ்சி, மதுவிச்சை, வளையாபதி முதலியன. இவற்றுள் இரண்டொன்று நீங்கலாக மற்றவை அனைத்தும் பல்லவர்காலத்திற்செய்யப்பட்டவை என்பது அவற்றின் வடமொழிப் பெயர்களைக் கொண்டே கூறலாம்.[1]

(2)யாப்பருங்கலக் காரிகை உரையால், கலிதயனார் என்பவர் செய்த யாப்பு நூலும் பாடலனர் செய்த யாப்பு நூலும், பெயர் தெரியாப் புலவர் ஒருவர் செய்த யாப்பு நூலும் இருந்தன என்பது தெரிகிறது:[2]

(3) தொல்காப்பியச் செய்யுளியல் உரையிற் காணப்பெறும் நூல்கள் சிலவும் பல்லவர் காலத்தன எனக்கோடல் தவறாகாது. அவை யாழ் நூல் கந்தர்வ நூல்[3] (இவை நூல்). பருப்பதம், தந்திரவாக்கியம், வஞ்சிப்பாட்டு, மோதிரப் பாட்டு, கடகண்டு, விளக்கத்தார் கூத்து முதலியன.[4]


  1. Vide Author’s Article on “Books on Tamil Prosody’ (Selvi, Vol. 15)
  2. Ibid pp.377–378.
  3. Ibid p.379.
  4. ‘காந்தர்வ வித்தை’யில் மகேந்திரனும் இராசசிம்மனும் பல்லவர் புலவர் என்பது முன்னரே கூறப்பட்டன அல்லவா?