பக்கம்:மணிவாசகர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன்னடிமையே' என்னும் இடையறாச் சிந்தையுடன் அவற்றை நுகரும் வலியில்லாதவன். பொருளு மின்பமு மொரீஇ யருளொடு பொறையு மாற்றலு கிறைபே ரொழுக்கமும் வாய்மையுந் தவழுந் தூய்மையும் தழீஇ ஓரறி வுயிர்க்கு முறுதுய ரோம்பிக் காலோய் நடைய னாகித் தோலுடுத்(து): என்பெழு மியாக்கையன் றுன்புறத் துலங்காது வரையுங் கானு மெய்திச் சருகொடு கானி ரருந்திக் கடும்பனிக் காலத்து மாரீ ரழுவத் தழுங்கி வேனிலில் ஐவகை யழலின் மெய்வருந்த வருந்தி இவ்வகை யொழுகு' தல் வேண்டும். எனவும் அறிவுறுத் தருளினர். இனி, அவ்விறைவன்றானே உயிர்கள் தன்னையறிந்து அடைய வொட்டாமல் மறைத்து நிற்கும் மலத்தின் இலக் கணங்கள் இவையெனவும், உயிர்களின் இயல்கள் இவை எனவும், தனது தன்மை இஃது எனவும் நமக்கு அறிவு நூல்கள் வாயிலாக விளக்கி யருளினான். இவ்வாற்றான் இன்ன இன்ன செயல்களை மேற்கொள்ளக் கடவீர் எனத் தலைவன் பணித்தும் அச்செயல்களும் மக்களாற் செய்யக் கூடியனவு மாயிருந்தும் அவைகளை மேற்கொள்ளாமல் பிறதுறைகளில் சென்றுழலும் மக்கள். தன்னால் இயலாத தொன்றைத் தன் தலைவன் பணித்தானாயினும் அதனை விரைந்து மேற்கொள்ளும் நாயினுங் கடையராயினர். இன்னும் நாயின் தலைவன் அதற்கு இடும் பணியின் பயன் தன்னதாதலையும், உயிர்களின் தலைவன் அவை களுக்கு இடும் பணியின் பயன் அவற்றிற்கே உரியதா தலையும் உய்த்துணரின் நாயினும் மக்கள் எத்துணைக் கடையராவர் என்பது நன்கு புலனாகும். .*.*.* مسيب. 39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/39&oldid=852775" இலிருந்து மீள்விக்கப்பட்டது