பக்கம்:மலர் மணம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 187

கிழித்துவிட்டதால் குருதி பிரிட்டு ஓடிக்கொண்டிருப் பதை அப்போதுதான் உணர்ந்தேன். என்னுல் எழுந்து உட்காரவே முடியாதபோது எப்படி நிற்க முடியும் ?

மாமா மிகவும் சினந்து என்னேக் கையாலும் கடுஞ் சொல்லாலும் தாக்குவாரென அஞ்சி நடுங்கினேன். எழுந்திருக்கவும் எ ன் ைல் முடியாதே - என்ன செய்வேன் !

‘ என்ன் நடந்தது ? காலில் ஏன் குருதி கொட்டு கிறது ? என்று அத்தை பரிவுடன் கேட்டார்கள். நான் நடந்தவற்றை விளக்கினேன். எதிர்பார்த்ததற்கு மாருக மாமாவும் மனம் திரும்பிவிட்டார். என்மேல் மிகவும் இரக்கப்பட்டார். தம் மேல்துணியால் என் கால் காயத்தைக் கட்டினர். அல்லியைக் காப்பாற்றியதற் காக நன்றி தெரிவித்தார். இதற்குமுன் வீட்டில் என்னைத் தாக்கியதற்காக மன்னிப்புக் கேட்டார். அவரும் அத்தையுமாக என் இரு தோள்களிலும் கைகொடுத்துத் தூக்கி நிறுத்தினர்கள். அண்மையில் பாதையில் விடப் பட்டிருந்த அவர்களது மாட்டு வண்டிக்குக் கொண்டு செல்லப்பட்டேன்.

எல்லோரும் வண்டியில் ஏறிக்கொண்டோம். வண்டி எங்கள் ஊர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. நேரே யார் வீட்டுக்குச் செல்வது ? மாமாவும் அத்தையும் அல்லியும் தங்கள் வீட்டில் இறங்கிக்கொண்டு, என்னை எங்கள் வீட்டில் இறக்கிவிட்டு வரும்படி வண்டிக் காரனுக்கு ஆணேயிடுவார்கள் என்று எண்ணிக் கொண்டு போனேன். ஆனல் மாமா என்ன செய்ய இருக்கிருரோ! என்னையும் தங்கள் வீட்டிலேயே இறக்கிக் கொள்வாரோ என்னவோ !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/189&oldid=656197" இலிருந்து மீள்விக்கப்பட்டது