பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 முருகவேள் திருமுறை (1 திருமுறை 5. காலன் வரும்போது காட்சிபெற உனைத்தி னந்தொழு திலனுண தியல்பினை உரைத்தி லண்பல மலர்கொடுன் அடியிணை உறப்ப ணிந்தின் ஒருதவ மிலன்ன தருள்மாறா உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன் \» விருப்பொ டுன்சிக ரமும் வலம் வருகிலன், உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் மலைபோலே கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர் கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு பொருபோதே கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள் கணத்தில் என் பயமறமயில் முதுகினில் வருவாயே வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுன விரித்த குஞ்சியர் எனுமவு ணரை அமர் புரிவேலா! மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை விரைத்த சந்தன ம்ருகமத புயவரை உடையோனே!