பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382

பன்னிரு திருமுறை வரலாறு


அருளுதல் இறைவனது பேரருளின் பெருமையாமென்றும் இத்திருப்பதிகத்தில் சுவைபெற விரித்துக் கூறியுள்ளார்.

" அங்கைகொண்டமரர் மலர் மழைபொழிய

அடிச்சிலம் பலம்பவந் தொருநாள் உங்கைகொண் டடியேன் சென்னி வைத்தென்னை

உய்யக்கொண்டருளிளை ' என்றதொடரால் இறைவன் குருவாயெழுந்தருளிவந்து திக்கைசெய்து தமக்கு நற்பொருளையுபதேசித்த திருவருட் செயலைக் கருவூர்த் தேவர் மனமுருகிப் பாராட்டியுள்ளார். இவ்வாறு இறைவன் திருவருட் பெருமையை எடுத்துக் கூறு முகத்தால் அப்பெருமான்பால் எல்லா மக்களும் பேரன்புடையராயொழுகவேண்டிய இன்றியாமையினையும் இத்திருப்பதிகத்தில் வற்புறுத்தினமை காணலாம்.

'திருவருள்புரிந்து எனத் தொடங்கும் திருவிசைப்பாப் பதிகம், பாண்டி நாட்டுத்தலங்களுளொன்ருகிய திருப்பூ வனத்திற் கோயில் கொண்டருளிய இறைவனைப் போற்று வது. திருமால் பிரமன் முதலிய தேவர்களாலும் வேதங் களாலும் இன்ன தன்மையனென்றுணர முடியாத இறை வன் அடியார்க்கு எளிவந்தருள்புரியும் எளிமையினை இத் திருப்பதிகத்தில் தமது அநுபவத்தில் வைத்துக் கருவூர்த் தேவர் இனிது விளக்கியுள்ளார்.

  • கடுவினைப் பாசக்கடல் கடந்தைவர்

கள்ள ரைமெள்ளவே துரந்துன் அடியினையிரண்டும் அடையுமா றடைந்தேன்

அருள்செய்வாய் அருள்செயா தொழிவாய் ' என இறைவனை நோக்கி முறையிடும் பகுதி " நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானுேவிதற்கு நாயகமே " எனத் திருவாதவூரடிகள் கூறிய அன்புரையினை நினைவு படுத்துகின்றது.

பெரியாவாகருணை என்ற திருவிசைப்பா, சாட்டியக் குடியென்ற தலத்தில் எழுந்தருளிய இறைவன்மேற் பாடப் பெற்றதாகும். சாட்டியக்குடியென்னும் இவ்வூர் தஞ்சை சில்லாவில் நாகப்பட்டினந் தாலுகாவில் உள்ளது. இங்குள்ள திரு ஏழிருக்கை என்னும் திருக்கோயிலில் எழுந் தருளிய இறைவனை ஏழிருக்கையிலிருந்த ஈசன் என்றும் அப்பெருமானுக்கு இருமுகம், கழல் மூன்று, ஏழு கைத்தலம்

1. திரு ஏழிருக்கை 484-1925-ம் ஆண்டு கல்வெட்டு அறிக்கை.