பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/726

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுராந்தகம்) திருப்புகழ் உரை 167 723. (சயில அங்கனைக்கு) மலைமகளாகிய பார்வதிக்கு (உருகி) அவள் பக்திக்கு உருகித் (தமது) இடது பாகத்தைத் தந்தருளின (கம்பர்) சிவனார், பலவிதமான (சாரி) வட்டமாய் ஒடுதல் முதலான கூத்துக்களையும் (சதி) தாள ஒத்துக்களையும் கொண்ட ஆடலை உடையவர், சடையிட த்திலே கங்கையை வைத்துள்ள (நம்பர்) பெருமான் ஆகிய சிவபிராற்கு - வாக்கு அழியவும், செயல் அழியவும், மனம் அழியவும், (நித்தத்துவம்) என்றும் உளதாம் தன்மையைப் பெற நீ செய்த உபதேசத்தைச் சிறியவனாகிய எனக்கும் நீ சொல்லி உதவினால் கொஞ்சமேனும் உனது குருத்துவம் குருமூர்த்தியாம் பதவி குறைந்துவிடுமா என்ன! வேலாயுதத்தை எடுத்துச் செலுத்திக் கடலிலிருந்த மாமரமாய் நின்ற சூரனைப் பிளந்து, தேவர்கள் வாழ. சகல அண்டங்கள் முழுமையும் ஒரு நொடிப் போதில் சுற்றின வலிமை வாய்ந்த, கடுமை கொண்ட, முழு நீல நிறங்கொண்ட மயிலைப் பாய்ந்தோடச் செய்தவனும், பழைய சிறந்த பொன்மயமான (குன்று) மேருமலையை (இடித்த) செண்டால் அடித்தவனுமான (சங்கிராம - விநோதா) போர்விநோதனே! (போர் விளையாடலை உடையவனே): மதுராந்தகத்தில் வட திருச்சிற்றம்பலம் என்னும் திருக் கோயிலில் வீற்றிருக்கும் பெருமாளே! (குருத்துவங் குறையுமோ தான்)