பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 515 கோலமும் உதிப்ப - விநாயகராதி சதாசிவாந்தமாகிய மூர்த்திகளின் திருக்கோலங்களும் பிறவும் பிரசன்னமாக, கண்டு - அவைகளைத் தரிசித்து, உள - சரீர நிலைக்கு ஆதாரமாகவுள்ள நாலினை - நாலங்குலப் பிராணகலையை, மறித்து - ஒவ்வொரு சுவாசங்களின் வழியாகவும் சிறிது சிறிதாகக் கழிந்து போகாதபடி தடுத்து, இதம் பெறு - இனிமையாகிய, கோ என முழக்கு சங்கு - கோ என்று முழங்கும் சங்கத்தொனியாகிய, விந்து நாதம் - விந்து சம்பந்த நாத ஒலி கூடிய முகப்பில் - கூடி முழங்கும் இடத்து நின்று, இந்திர வான அமுதத்தை - இந்திர போக மாகிய தேவாமிர்தத்தை, உண்டு - பருகி, ஒரு கோடி நடன பத அம் சபை - அநந்தாநந்த நடநம்புரியுங் குஞ்சிதபாத அழகிய திருச்சபையை, என்று சேர்வேன்-அடியேன் எக் காலத்து அடையப் பெறுவேன்? (ஆலம்) நீரை, (மலருற்ற) கைவிரல்களினின்றும் கங்கை முதலிய நதிகளாக விரித்த, (சம்பவி) - சாம்பவி - பார்வதி - (அல்லது. ஆலம் - நீரில் உண்டாகும் - மலர் - மலராகிய * தாமரையில் . உற்ற வீற்றிருக்கின்ற சாம்பவி), (வேரிலி) அடியிலி, குலக்கொழுந்திலி) சிறந்த முடியிலி - ஆதியந்த மில்லாதவள், (ஆரனர்) வேதம்வல்ல பிரமனுடைய, தலைக்கலம் - தலைக்கலனை - தலையோடாம் பாத்திரத்தைக் (கொளி) கொண்டவள், செம்பொன் போன்ற (உயர்ந்த) தன்மையை உடையவள், (என்னுடைய) ஆணவத்தையும், மயக்கத்தையும் (கல்லி) தோண்டி வேரறுத்து, (காமியம்) ஆசைகளை, ஒழித்து, என்னை ஆண்டருளின உமை, பராசத்தி, அழகி (பார்வதி) பெற்ற குழந்தையே! வேல் ஏந்தி, இந்திரர்களும், திருமாலும், பிரமனும் பிழைக்கும் வண்ணம் வஞ்சகராகிய அசுரர்களின் இருப்பிடங்களை எரிமூட்டி மதிக்கத்தக்க கடல்களையும் வற்றச் செய்த வேலனே! 實 பார்வதி தாமரையில் வீற்றிருப்பது:- முக்கண்ணி விரும்பும் வெண்டாமரை" திருமந்திரம் 1067 அம்புயமேல் திருந்திய சுந்தளி - அபிராமி அந்தாதி - 5.